கையில் குழந்தையுடன் பிரியங்கா...யாருடைய குழந்தை என ஆர்வமாக கேட்கும் ரசிகர்கள்
சென்னை : விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. விஜய் டிவியில் பிரபலமான பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு விஜய் டிவி நடத்தும் மேடை நிகழ்ச்சிகள், பிரபலங்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில், சமையல் வீடியோக்கள், வெளிநாடு சென்ற வீடியோக்கள் உள்ளிட்ட பல வீடியோக்களை தொடர்ந்து அப்லோட் செய்து வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். விஜய் டிவியில் தொகுப்பாளரான இவருக்கு ஃபேன்ஸ் அதிகம் என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார். இவர் குழந்தைத்தனமான பேச்சு, தொகுத்து வழங்கும் ஸ்டைல் ஆகியன பலரின் ஃபேவரைட்.
இன்ஸ்டாகிராமிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் தனது பிறந்தநாள் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். டாப் ஹீரோயின்களுக்கு இணையாக அழகாக போட்டோஷுட்களை நடத்திய போட்டோக்களை பகிர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறார். பிரியங்கா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தன்னுடைய அம்மா மற்றும் தம்பி பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்.
பிரியங்காவின் தம்பி ரோகித்தின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் போட்டோ, அவரின் வலைகாப்பு போட்டோவை வெளியிட்டார். கர்ப்பமாக இருக்கும் ரோகித்தின் மனைவி வயிற்றில் காதை வைத்து கேட்கும் பிரியங்காவின் போட்டோ செம டிரெண்டானது.
இந்நிலையில் கையில் பிறந்த குழந்தையுடன் இருக்கும் தன்னுடைய அழகான போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. இதை பார்த்த பலரும் குழந்தை அழகாக இருக்கிறது என கமெண்ட் செய்துள்ளனர். பலரும் பிரியங்கா அத்தை ஆனதற்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விபரம் புரியாமல் சிலர், இது யாருடைய குழந்தை...உங்க குழந்தையா அக்கா என கேட்டு ஷாக் கொடுத்துள்ளனர்.
இருந்தாலும் கையில் குழந்தையுடன் இருக்கும் பிரியங்காவின் போட்டோ இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளுவதுடன், செம வைரலாகி வருகிறது. வாழ்த்து மழையில் நனையும் பிரியங்காவிற்கு லைக்குகளும் மலை போல் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











