twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம்.. ஏமாற்றிய பிரபல டிவி நடிகைகள்? வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

    |

    சென்னை: இன்ஃப்ளுயன்ஸர் ஸ்கேம் என பிரபல சின்னத்திரை நடிகைகள் குறித்து இளைஞர் ஒருவர் வெளியிட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

    சிறு சிறு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் பொருட்களை சின்னத்திரை பிரபலங்கள் தாங்கள் பயன்படுத்துவதாக கூறி விளம்பரப்படுத்துவது வாடிக்கையான ஒன்று.

    இதற்காக நிறுவனங்கள் கொடுக்கும் பொருட்கள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அந்தந்த நிறுவனங்களின் பொருட்களுக்கு ஆதரவாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

    பிரபல நடிகைகள்

    இந்நிலையில் சின்னத்திரை நடிகைகளான ஆலியா மானசா, மைனா நந்தினி, தர்ஷா குப்தா, ஆர்ஜே ராகவி ஆகியோர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிராண்டுகளை விளம்பரப்படுத்துவதாக கூறி பணம் பெற்றுள்ளனர். மேலும் விளம்பரப்படுத்துவதாக கூறி பொருட்களையும் பெற்றுள்ளனர்.

    இன்ஃபுளுயன்ஸர் ஸ்கேம்

    ஆனால் வருடக் கணக்காகியும் அந்த பொருட்களை விளம்பரப்படுத்தவே இல்லை என சில நிறுவனங்கள், அவற்றுக்கு ஆலோசனை கூறும் ஜேசன் சாமுவேல் என்பவரிடம் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து பிரபலங்கள் பெற்ற பொருட்கள், மற்றும் அவர்கள் பெற்ற பணம் தொடர்பான ஆதாரங்களுடன் இன்ஃபுளுயன்ஸர் ஸ்கேம் என வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    ஆதாரங்கள் வெளியீடு

    ஜேசன் சாமுவேல் வெளியிடும் வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகிறது. நடிகைகள் ஆலியா மானசா, தர்ஷா குப்தா, மைனா நந்தினி உள்ளிட்ட பலர் குறித்தும் ஆதாரங்களை வெளியிட்டு வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

    மெஸேஜ் ஸ்க்ரீன் ஷாட்

    இதனை பார்த்த பதறிய பிரபலங்கள் நிறுவனங்களிடம் இருந்து தாங்கள் பெற்ற பணத்தை திருப்பி அளித்துள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் ஜேசன் சாமுவேல் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நடிகை மைனா நந்தினி தான் பெற்ற பணத்தை திருப்பி அளித்துவிட்டதாக நிறுவனங்கள் கூறியிருக்கும் மெஸேஜ் ஸ்க்ரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

    பிராண்டுகளுக்கு விளம்பரம்

    பிராண்டுகளுக்கு விளம்பரம்

    இதனிடையே தர்ஷா குப்தா உள்ளிட்ட பலரும் சாமுவேல் கூறிய கருத்துகளுக்கு எதிராக வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர், அதே நேரம் புகார்கள் செய்யப்பட்ட பிராண்டுகளுக்கு தொடர்ந்து போஸ்ட்களும் பதிவிட்டு வருகின்றனர்.

    நான்கரை லட்சம் வரை

    நான்கரை லட்சம் வரை

    ஆல்யா மானஸா, ப்ரீத்தி ஷர்மா உள்ளிட்ட சில பிரபலங்கள் தாங்கள் பணம் பெற்ற சம்பந்தப்பட்ட பிராண்டுகளிடம் மன்னிப்பு கேட்டு போஸ்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். தற்போது வரை பிரபலங்கள் சிலர் நிறுவனங்களுக்கு நான்கரை லட்சம் ரூபாய் வரை பணத்தை திருப்பி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ரசிகர்கள் அதிர்ச்சி

    ரசிகர்கள் அதிர்ச்சி

    இருப்பினும் ஆலியா மானசா உள்ளிட்ட சிலர் தங்களிடம் கேட்காமல் எப்படி வீடியோ வெளியிடலாம் என்று கூறி ஜேசன் சாமுவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னணி சின்னத்திரை நடிகைகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    TV Artists like Alya Manasa and Dharsha gupta cheated some start up companies? Jason Samuvel an adviser of the start up companies has released videos about the influyenser scam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X