தலை தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாரான சின்னத்திரை பிரபலங்கள்.. அட இவ்வளவு பேரா?
சென்னை: நாளை தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது/ புது படங்கள் ரிலீசாக உள்ளன. ஓடிடி தளங்களும் தங்களது பங்கிற்கு அதிகமான படங்களை வெளியிட உள்ளன. இவற்றையெல்லாம் கொண்டாடும் வகையில் அடுத்தடுத்து விடுமுறை தினங்களும் கிடைத்துள்ள நிலையில் சாதாரண மக்களே தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் புது மாப்பிள்ளைகளுக்கு இது தலை தீபாவளி என்பதால் அவர்களை கையில் பிடிக்க முடியாது. மாமியார் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டு, புது உடை போட்டு, புது படத்திற்கு சென்று என அவர் அடுத்தடுத்த கொண்டாட்டத்திற்கு தயார் ஆவார். அந்த வகையில் நாளை தலை தீபாவளியை கொண்டாடவுள்ள சின்னத்திரை பிரபலங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தலை தீபாவளி: ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் திருமணம் எவ்வளவு முக்கியமோ அதேபோல அவர்களது தலை தீபாவளி. தலைப்பொங்கல் போன்றவை மிகச் சிறப்பான வடிவத்தை பெற்று வருகின்றன. குறிப்பாக தலைப் பொங்கலைவிட தலை தீபாவளியை தான் மக்கள் மிகச் சிறப்பாக்கி வருகின்றனர். அந்த நாளில் தான் புது மாப்பிள்ளைக்கு மாமியார் வீட்டில் வாய்க்கு ருசியாக மூன்று வேளையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டு அது மட்டுமில்லாமல் புது துணி எடுத்துக் கொடுத்து, கையில், கழுத்தில் தங்க நகை எடுத்து போட்டு என அவரை கொண்டாடுவார்கள்.
தலை தீபாவளி கொண்டாட்டம்: புதுமணப் பெண்களாக இருந்தாலும் அவர்கள் வழக்கம் போல தன்னுடைய கணவருடன் சேர்ந்து இதையெல்லாம் அனுபவித்துக் கொள்ள வேண்டியது தான். மாப்பிள்ளைக்கு தான் தலை தீபாவளியில் மவுசு அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை பிரபலங்களை குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். பிரேம் ஜாக்கோப் கடந்த ஆண்டு அக்டோபரில் நடிகை சுவாசிக்காவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நாளை தலை தீபாவளி. அடுத்ததாக இந்த லிஸ்ட்டில் சீரியல் நடிகர் அவினாஷ் இணைந்துள்ளார். இவர் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நாயகனாக நடித்து வரும் நிலையில் தன்னுடைய நீண்ட காதலி தெரசாவை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்டார்.

நாதஸ்வரம் சீரியல் நடிகை: கலைஞர் தொலைக்காட்சியின் முன்னணி தொடரான பொன்னி c/o ராணி சீரியல் நடிகர் அர்ஜுனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில் அவருக்கும் இது தலை தீபாவளி. இதனிடையே சின்னத்திரை தொகுப்பாளர் அஸ்வந்த் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி மனோகரனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடித்த நிலையில், நாளைய தினம் தலை தீபாவளியை கொண்டாட தயாராகியுள்ளனர். அடுத்ததாக நாதஸ்வரம் சீரியல் நாயகி ஸ்ருதிகா மற்றும் சீரியல் நடிகர் எஸ்எஸ் ஆரியன் ஜோடிக்கும் நாளைய தினம் தலை தீபாவளி கொண்டாட்டம்.

அன்பே வா சீரியல் நடிகர்: கடந்த ஏப்ரலில் திருமணம் செய்துக் கொண்ட சீரியல் நடிகை மற்றும் மருத்துவர் தர்ஷனா அசோகன் அவரது காதலர் அபிஷேக்கை திருமணம் செய்த நிலையில், இந்த ஜோடியும் தலை தீபாவளிக்கு தயாராகியுள்ளது. இதேபோல கடந்த ஜூன் மாதத்தில் பிக்பாஸ் பிரபலம் அபிஷேக் ராஜா மற்றும் அவரது தோழி திவ்யாவிற்கு திருமணம் நடந்த நிலையில் இவர்களும் தலை தீபாவளி கொண்டாட்டத்திற்கு ரெடிங்கோ. அடுத்ததாக அன்பே வா சீரியல் நடிகர் விராட் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் நவீனாவும் நாளைய தினம் தலை தீபாவளியை கொண்டாடவுள்ளனர். அடுத்ததாக சின்னத்திரை நடிகை சந்தியா மற்றும் நடன இயக்குநர் சாந்தி மகன் முரளிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் நாளைய தினம் இவர்களுக்கும் தலை தீபாவளிதான்.

வில்லி நடிகை நிவேதிதா: இதனிடையே திருமகள் தொடரின் வில்லி நிவேதிதா மற்றும் அந்த சீரியல் நாயகன் சுரேந்தரும் திருமணம் செய்த நிலையில் நாளைய தினம் இவர்களுக்கு தலை தீபாவளி கொண்டாட்டம்தான். இதேபோல சின்னத்திரை நடிகர் அரவிஷ் மற்றும் ஹரிகா சாதுவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் அவர்களும் தலை தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் filmi beat சார்பில் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











