கொரோனாவால் ரத்தான ஷுட்டிங்: பழைய நிகழ்ச்சிகளை தூசு தட்டும் சேனல்ஸ்.. மீண்டும் மெட்டி ஒலி, சக்திமான்!

சென்னை: கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தொலைக்காட்சி சேனல்கள் பழைய நிகழ்ச்சிகளை தூசு தட்ட ஆரம்பித்துள்ளன.

Recommended Video

Doordarshan Re telecasts Shaktimaan and Ramayana

கொரோனா பீதியால் உலகமே முடங்கிக் கிடக்கிறது. கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை உலகம் முழுக்க 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

எட்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸிடமிருந்து தங்களின் மக்களை பாதுகாக்க போராடி வருகின்றன.

படப்பிடிப்புகள் ரத்து

படப்பிடிப்புகள் ரத்து

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரைப்படங்கள் மட்டுமின்றி டிவி சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்த தென்னிந்திய திரைப்பட சம்மேளனமான ஃபெஃப்ஸி உத்தரவிட்டது.

ஜவ்வு மிட்டாய் போல்

ஜவ்வு மிட்டாய் போல்

இதனால் சீரியல்களை நம்பியிருந்த தொலைக்காட்சி சேனல்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. கடந்த ஒரு வாரமாய் பல சீரியல்கள் ஜவ்வு மிட்டாய் போல் கதையே இல்லாமல் வலுக்கட்டாயமக 30 நிமிடம் வரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிளாஷ் பேக்குகளை போட்டு மக்களின் பொறுமையை சோதித்து வருகின்றனர்.

டபுள்ஸ் டபுள்ஸ்..

டபுள்ஸ் டபுள்ஸ்..

படப்பிடிப்பு நடைபெறாததால் கையிருப்பு இருந்த சீரியல்கள் அனைத்தையும் இழுத்து பிடித்து இத்தனை நாட்கள் ஒளிபரப்பி விட்டனர். சனிக்கிழமை கூட சீரியலை போட்டு கல்லாக்கட்டிய பிரபல தொலைக்காட்சி சேனல், தற்போது டபுள்ஸ் டபுள்ஸ் என அறிவித்து புது படங்களையும் போட்ட படங்களையும் போட்டு தாக்கி வருகிறது.

தூர்தர்ஷன்

தூர்தர்ஷன்

தற்போது வார நாட்களில் பகலில் போடப்படும் சீரியல்களின் கையிருப்பும் தீர்ந்துவிட்டது போல. பழைய சீரியல்களை தூசு தட்ட ஆரம்பித்துள்ளன தொலைக்காட்சி சேனல்கள். ஏற்கனவே தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டன.

மெட்டி ஒலி சீரியல்

மெட்டி ஒலி சீரியல்

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியும் மீண்டும் தொடங்கியிருக்கிறது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியான சக்திமான் நிகழ்ச்சியை நாளை முதல் மீண்டும் ஒளிபரப்ப உள்ளது டிடி. இந்நிலையில் டபுள்ஸ் டபுள்ஸ் என அறிவித்து வந்த சன் டிவி, இன்று முதல் மெட்டி ஒலி சீரியலை ஒளிபரப்புகிறது.

டைட்டில் சாங்

டைட்டில் சாங்

மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தாலும், அதன் டைட்டில் பாடலுக்கும் டான்ஸ் மாஸ்டர் சாந்தியின் நடனத்தை காணவும் அதைவிட பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்நிலையில் இந்த பழைய நிகழ்ச்சிகள் எல்லாம் மீண்டும் தூசு தட்டப்பட்டு மக்களின் குவாரண்டைன் காலத்தை குதூகலிக்க செய்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X