தீபாவளிக்கு டிஆர்பி ரேட்டிங்கில் எந்த டிவி சேனல் டாப் - போட்டா போட்டி

சென்னை: தீபாவளி தினத்தன்று அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டு சிறப்பு நிகழ்ச்சிகளையும், புத்தம்புதிய திரைப்படங்களையும் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பின. தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் யார் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இந்த TRP ரேட்டிங் அறிவிக்கப்படும். அதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் தொலைக்காட்சி உரிமையாளர்கள்.

TV channels TRP rating on Diwali Festival Day

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. அரசாங்கம் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட கால அவகாசங்களை கொடுத்தாலும் அதை சிறிதும் சட்டை செய்யாத நமது மக்கள் பட்டாசு மழையை பொழிந்து தள்ளினார்.

ஒரு புறம் தீபாவளிக்கு வெளியான பிகில், கைதி திரைப்படங்களை காண மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோத போட்டிபோட்டு கொண்டிருந்தனர். மறுபுறம் வீட்டின் உள்ளே உட்கார்ந்து கொண்டு மக்கள் இந்த திரையுலகத்தையே சுற்றி பார்த்தனர். எப்படி என்று கேட்குறீர்களா.

தொலைக்காட்சி என்ற ஒரு என்டெர்டெய்னர் இருக்கையில், ஏன் கவலைப்பட வேண்டும். அனைத்தையும் நம்ம வீட்டுக்குள் போட்டிபோட்டு கொண்டுவரும் விருந்தாளிகள் அவர்கள். இந்த ஆண்டில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அனைத்தையுமே நமது தமிழ் தொலைக்காட்சிகள் திரையில் கொடுத்த வள்ளல்கள்.

ஜீ தமிழ் ஒரு புறம் தல அஜித்குமார் நடித்த மெகா ஹிட் திரைப்படமான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீரியஸாக ஒளிபரப்பி பாராட்டை அள்ளிச் சென்றாலும் அவர்களுக்கு போட்டியாக திரில்லர் காமெடி படமான காஞ்சனா 3 திரைப்படத்தை ஒளிபரப்பி குழந்தைகள் மட்டுமின்றி கலகலப்பு விரும்பிகளின் மனதை கொள்ளை கொண்டது சன் தொலைக்காட்சி.

இவர்களின் போட்டி இப்படியென்றால் ரியாலிட்டி ஷோகளின் அரசன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மட்டும் சும்மா இருப்பார்களா என்ன. அவர்கள் பக்கத்தில் இருந்து சரவெடியாக ஒளிபரப்பானது ஜெயம் ரவி ஒரு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்த கோமாளி திரைப்படம்.

பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் முன்னணி வரிசையில் இருக்கும் இவர்கள் மத்தியில் இப்படி ஒரு போட்டி என்றால், புதிதாக முளைத்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அமலா பால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியான ஆடை திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

இவை அனைத்தும் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள். இவைகளை தாண்டியும் பல படங்கள் ஒளிபரப்பப்பட்டன. மாலை வான வேடிக்கையால் நமது காதுகள் ரீங்காரம் அடித்தாலும் அதை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் திரைப்படங்களை ரசித்தவர்கள் பலர்.

படங்கள் வரிசையாக பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைய மேலும் பல ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், பிரபலங்களின் சந்திப்பு, தலை தீபாவளி நிகழ்ச்சிகள் என கலை கட்டியது.

இவையெல்லாம் இருக்கும் போது பட்டிமன்றம் இல்லாத தீபாவளி பண்டிகையா. அதுவும் சாலமன் பாப்பையா மற்றும் அவரது குழுவினர் இல்லாத சன் டிவி பட்டிமன்றமா. இவர்கள் ஒரு புறம் கலக்க கலைஞர் தொலைக்காட்சியில், லியோனி தலைமையில் ஒரு சுவாரஸ்யமான பட்டிமன்றம். பட்டிமன்றத்தை பிடிக்காதவர்கள் என யாராவது இருப்பார்களா என்ன. நம்மை சிரிக்க வைக்க, சிந்திக்க வைக்க, அறிவை வளர்க்க நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி எந்த தொலைக்காட்சியானாலும் என்றுமே முதலிடம் தான்.

பொதுவாக இந்த தொலைக்காட்சிகள் தங்களது டிஆர்பி (TRP) ரேட்டிங்காக பல நிகழ்ச்சிகளை மற்றவர்களை விட சிறப்பாக பார்வையாளர்களை கவரும் வண்ணம் கொடுக்க வேண்டும் என்று அவரவர் முண்டியடித்து கொண்டு சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்குவதுண்டு. அப்படி இருக்கும் போது பண்டிகை தினம், அதுவும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் என்றால் சும்மா இருப்பார்களா என்ன.

அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பான தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் யார் TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கிறார்கள் என்பது கூடிய விரைவில் தெரியவரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இந்த TRP ரேட்டிங் அறிவிக்கப்படும். அதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் தொலைக்காட்சி உரிமையாளர்கள். வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X