2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா

சென்னை: தொகுப்பாளினியும் நடிகையுமான மோனிகா தற்போது இரண்டாவது ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஏற்கனவே இவருக்கு ஜேடன் எனும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் மோனிகா.

ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியைக் பார்க்கிறோமோ இல்லையோ, நிச்சயமாக அந்த செய்தியின் முடிவில் ஒளிபரப்பாகும் வானிலை அறிக்கையை அனைவரும் நிச்சயம் பார்ப்போம். காரணம் அந்த வானிலை அறிக்கையை வாசிக்கும் அறிவிப்பாளரான மோனிகா தான்.

TV Hostess Monica got a second child

சன் டிவியில் தலையை ஆட்டி ஆட்டி வானிலை அறிக்கை சொல்லி மிகவும் பிரபலமானவர் மோனிகா. அது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார். இவரின் தெளிவான உச்சரிப்பும், அறிக்கையை சொல்லும் விதமும் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு இருந்ததால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.

இவர் புகழின் உச்சத்தில் இருந்தபோதே திடீரென காதல் திருமணம் செய்து கொண்டு டிவி நிகழ்ச்சிகளுக்கு டாடா காட்டிவிட்டு போய்விட்டார். இடையில் ஒரு சில படங்களிலும் நடித்தார். கடந்த 2011ஆம் ஆண்டில் ஜீவா நடித்த ரவுத்திரம் படத்தில், ஜீவாவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

பின்பு முதல் குழந்தை பிறந்தவுடன் சிறுது காலம் ஓய்வு எடுத்துக்கொண்டு தொகுப்பாளினியாக சின்னத்திரையில் ரிஎன்ட்ரி ஆனார். மேலும் சில படங்களில் தலைகாட்டியதும் உண்டு.

TV Hostess Monica got a second child

இந்நிலையில், இவர் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். ஏற்கனவே இவருக்கு ஜேடன் எனும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் மோனிகா.

தற்போது அவர் ஒரு யூடியூப் சேனலும் நடத்திவருகிறார். அதில் அவரே தொகுப்பாளினியாக இருக்கிறார். மேலும் ஆன்லைனில் பிசினஸ் செய்வதும் அதை விளம்பரங்கள் மூலம் ப்ரோமோஷன் செய்தும் வருகிறார். மோனிகாவும் அவரது கணவரும் இணைந்து கடந்த ஏழு வருடங்களாக பிசினஸ் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மோனிகா இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். பிரசவம் ஆனதால் சிறுது காலத்திற்கு ஓய்வு எடுத்து கொண்டு பின் மீண்டும் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X