நீங்களே கலாய்த்தால், நாங்க எதுக்கு இருக்கோம்?: முருகதாஸ் மீது மீம்ஸ் கிரியேட்டர்கள் கோபம்
Recommended Video

சென்னை: சர்கார் வெற்றியை கொண்டாட வெட்டப்பட்ட கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சர்கார் படத்தில் இலவச மிக்சி, கிரைண்டரை தீயில் போட்டு எரிக்கும் காட்சிக்கு ஆளும் அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டது.
இந்நிலையில் சர்கார் வெற்றியை கொண்டாடியுள்ளது படக்குழு. அவர்கள் வெட்டிய கேக் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிரைண்டர்
படத்தில் தானே இலவச மிக்சி, கிரைண்டர் வரும் காட்சியை நீக்கச் சொல்வீர்கள். இப்போ என்ன செய்வீங்க என்று சொல்வது போன்று வெற்றிக் கொண்டாட்ட கேக்கில் மிக்சி, கிரைண்டர் உருவத்தை வைத்துள்ளனர். நீங்க நடத்துங்க முருகதாஸ்.
மீம்ஸ்
சர்கார் வெற்றிக் கொண்டாட்ட கேக்கை வைத்து மீம்ஸ் போடத் துவங்கிவிட்டனர். தல முருகதாஸுக்கு தில்ல பார்த்தியா?

கோபம்
சர்கார் படக்குழுவே கிண்டல் செய்யத் துவங்கிவிட்டால் நாங்கள் எல்லாம் எதற்காக இருக்கிறோம் என்று லைட்டா கோபப்பட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
எங்கே பாஸ்?
கேக்கில் மிக்சி, கிரைண்டர் இருக்கிறது ஆனால் திமுக ஆட்சியில் கொடுத்த டிவி எங்க பாஸ்?


Click it and Unblock the Notifications











