For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிகில் படத்திற்கு தளபதிக்கு வாழ்த்து சொன்ன தல - சீரியல் நடிகர் குறிஞ்சியின் மிமிக்ரி பாஸ்

|
THALA & THALAIVAR WISHING BIGIL MOVIE | MIMICRY BY ACTOR KURINJI | FILMIBEAT TAMIL

சென்னை: தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மிமிக்ரி கலைஞரும் சின்னத்திரை நடிகருமான குறிஞ்சி பிகில் படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பல்வேறு நடிகர்களின் குரலில் பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் குறிஞ்சி. சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் தொடர் உள்பட சில டிவி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரன் சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நல்ல நடிகர் என்பதோடு, பலகுரல் வித்தகர். பல நடிகர்களின் குரலில் அச்சு அசலாக பேசி அசத்துவார்.

TV Serial actor cum Mimicry Artist Kurinji congratulated the film Bigil

தற்போது அனைவரும் எதிர்பார்க்கும் படமான பிகில் படத்தைப் பற்றி முன்னணி நடிகர்கள் குரலில் பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

முதலில் தல அஜீத் குரலில், ஆக்சுவலா தளபதின்னாலே அடுத்து வர்றது தல தான். தளபதிக்கும் தலக்கும் தான் எப்பவும் போட்டின்னு எல்லாரும் நினைப்பாங்க. ஆனா, நாங்க ரெண்டு பேருமே நல்ல நண்பர்கள் தான். பிகில் படத்தை பத்தி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டேன். என்னோட நண்பன் விஜய்யோட படம் வெற்றியடையணும்னு கடவுள் கிட்டே வேண்டிக்கிறேன். ஹாய் விஜய் ஆல் தி வெரி பெஸ்ட்... அது... என்று அசத்தினார்.

Bigil Trailer:செஞ்சுட்டா போச்சு.. வெறித்தனத்துக்கும் மேல.. தளபதி மாஸ்.. அடி தூள் பிகில் டிரெய்லர்!

அடுத்ததாக, ரஜினி குரலில், டெஃபனட்டா அப்டி சொல்ணும்னு சொன்னா, சகோதரர் விஜய் சார் நல்ல நடிகர், இது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. தமிழ் நாட்டுக்கே தெரியும். பிகில் படம், பேரே வித்தியாசமா இருக்கே. ஏன்னா, ஒரு காலத்துல பிகில வச்சிதான் என்னோட வாழ்க்கையைவே நான் ஆரம்பிச்சேன். அப்படி இருக்கும்போது, இன்னிக்கு அதே டைட்டில்ல வந்து விஜய் சார் ஒரு படம் பண்றார்னா கட்டாயம் ஹாட்ஸ் ஆஃப் டு யு விஜய். இந்த படம் நல்லா வரணும்னு சொல்லி எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கிறேன், வாழ்க பாரதம் என்று உற்சாகமாக சொன்னார்.

TV Serial actor cum Mimicry Artist Kurinji congratulated the film Bigil

ஆக்சுவலா சொல்லப்போனா, விஜய் சேதுபதி சார் மாதிரி எல்லாம் பேசலாம், ஏன்னா நான் விஜய் சாரோட ரசிகன், அதனால தான் விஜய் சாரோட சேதுபதிய சேத்துகிட்டதுனால விஜய் சேதுபதின்னு வந்திடிச்சி. ரஜினி சாரோட பேட்ட பண்ணேனோ, அதே மாதிரி விஜய் சார் கூட வில்லனா ஒரு படம் பண்ணுவேன். அந்த படம் எல்லார்க்கும் புடிக்குண்ணு நம்புறேன், ஆங்... செமல்ல.... என்று விஜய் சேதுபதி குரலில் குதூகலமாக சொன்னார்.

அடுத்ததாக மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி குரலில், நமஸ்காரம் விஜய் சார், கேரளால இருந்து இங்க வந்து இந்த மைக் முன்னாடி நிக்கிறதுக்கு ஒரே காரணம், உங்களோட பிகில் படத்த பத்தி பேசணும்கிறதுக்காகத்தான். கண்டிப்பா இன்னிக்கு ரிலீஸாகப்போற இந்த பிகில் படம், வெற்றியடையணுன்னு சொல்லிட்டு கேரளா மக்கள் சார்பா நான் வாழ்த்து சொல்லிக்கிறேன், பின்னாடியே மோகன்லால் வருவாரு. ஆனா, இப்போ இல்லே லேட்டா வருவாரு, நமஸ்காரம் என்றார்.

அடுத்ததாக தளபதி விஜய் குரலில், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகப்பெருமக்களுக்கும், குட்டி குட்டி செல்லங்களுக்கும், நண்பா, உசுப்பேத்துறவன் கிட்டே உம்முன்னும் கடுப்பேத்துறவன் கிட்டே கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும். புடிச்சிருந்த எடுத்துக்கோ, இல்லேன்னா விட்ரு, நோ ப்ராப்ளம்.

பிகில் படத்தை பத்தி பேசணும்னா, பெண்களை உயர்வா வச்சி எடுத்த படம். கண்டிப்பா இந்த படம் சக்ஸஸ் ஆகும்ணு எனக்கு நம்பிக்கை இருக்கு நண்பா. அதனால் நீங்க எல்லோரும் தியேட்டர்ல் வந்து படத்தை பாருங்க, திருட்டு விசிடில மட்டும் யாரும் பாக்காதீங்க, என்று புன்னகைத்தார்.

English summary
Bigil starring Vijay is all set to release on the 25th of Diwali Celebration. All the celebrities of the film are congratulated. Mimicry Artist cum TV Serial actor Kurinji congratulated the film 'Bigil' and spoke with the voice of various actors.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more