எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்த டிவி நடிகை: திரையுலகினர் அதிர்ச்சி
Recommended Video

மலப்புரம்: கேரளாவில் டிவி சீரியல் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கவிதா(35). மலையாள டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். திருமணமான அவருக்கு 4 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

கேரளா
கவிதா தனது மகளுடன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் வசித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தனியாக இருந்துள்ளார்.

அழகு நிலையம்
கவிதாவுக்கு பெங்களூரில் அழகு நிலையம் துவங்க வேண்டும் என்று ஆசையாம். அதற்காக பணம் சேர்த்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு போதிய பணம் கிடைக்கவில்லை.

மனஉளைச்சல்
பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்புறமாக பூட்டியிருந்த வீட்டில் கவிதா கை பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

கொலை
கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. மேலும் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது. இது தற்கொலையா இல்லை கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











