பலாத்காரம் செய்தார்.. கர்ப்பமாக இருக்கிறேன்.. அந்த நடிகரை காணவில்லை.. சீரியல் நடிகை பரபரப்பு புகார்!
சென்னை: துணை நடிகர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததில் தான் இப்போது கர்ப்பமாக இருப்பதாக நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
கஹானி கர் கர் கி' , 'மெய்ன் நிக்லா ஹோகா சந்த்' உள்ளிட்ட ஹிந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானார் இந்த நடிகை. இவர் தன்னுடன் சீரியலில் நடித்து துணை நடிகர் ஒருவருடன் நெருங்கி பழகினார்.
கடந்த அக்டோபர் மாதத்தில்தான் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடிகர் ஹரியானா மாநிலம் யமுனா நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

போதை மருந்து கொடுத்து..
இந்நிலையில் துணை நடிகர் தன்னை ஒரு ஹோட்டல் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஹோட்டலுக்கு அவரை சந்திக்க சென்றபோது தனக்கு போதை மருந்து கொடுத்து தன்னை அவர் பலாத்காரம் செய்துவிட்டதாக நடிகை கூறியுள்ளார்.

தலைமறைவு
மேலும் தான் தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும் அந்த நடிகை தெரிவித்திருக்கிறார். கர்ப்பமான விஷயத்தை தெரிவித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியதும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் அந்த நடிகை தெரிவித்திருக்கிறார்.

உதவி செய்ய மறுப்பு
இதுதொடர்பாக யமுனா நகர் காவல்நிலையத்தில் அந்த நடிகரின் மீது நடிகை புகார் அளித்துள்ளார். நடந்த அனைத்தும் அந்த நடிகரின் குடும்பத்திற்கு தெரியும் என்றும் ஆனாலும் அவர்கள் தனக்கு உதவி செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் நடிகை தெரிவித்திருக்கிறார்.

தேடி வரும் போலீஸ்
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இருவர் குறித்தும் விசாரணை நடத்தினர். அதில் இருவரும் சில நிகழ்ச்சிகளை இணைந்து நடத்தியதும் அதனால் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள அந்த நடிகரை போலீசார் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











