தனித்தனி வழிகளில் சென்றுவிட்டோம்.. லாக்டவுன் நேரத்தில் கணவரை விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை!
சென்னை: பிரபல சீரியல் நடிகை தனது காதல் கணவரை விகாரத்து செய்துள்ளார்.
பிரபல இந்தி சீரியல் நடிகை சிம்ரன் கன்னா. இவர் பிரபல நடிகை சஹத் கண்ணாவின் சகோதரி ஆவார்.
ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வெளியான ஏக் ரிஷ்தா கியா கேஹ்லதா ஹை என்ற சீரியலில் காயத்ரி கோன்கா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் பெரும் பிரபலமானார் சிம்ரன் கன்னா.

சிம்ரன் கன்னா
மும்பையை பூர்விகமாக கொண்ட சிம்ரன் கன்னா, நடிகை, மாடல், இயக்குநர், பாடகி என பல்வேறு முகங்களை கொண்டவர். தொடர்ந்து கிருஷ்ணாபென் கக்ரவாலா, உதான்: சப்னோ கி, மாதா கி சவுகி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

தொழிலதிபருடன் டேட்டிங்
தி ஆக்ஸிடன்டல் பிரைம் மினிஸ்டர், ஜெய் மம்மி தி உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிருக்கிறார். 35 வயதான சிம்ரன் கன்னா , கடந்த 2000 ஆம் ஆண்டில் தனது காதலரான தொழிலதிபர் பரத் டுடானியுடன் டேட்டிங் சென்றார்.

உறவில் விரிசல்
அதன் பின் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிக்கு வினீத் கன்னா என்ற மகன் உள்ளார். வினீத்தின் பிறந்த பிறகு, சிம்ரனுக்கும் பரத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அவர்கள் பிரிந்து இருப்பதாக பல மமுறை செய்திகள் வெளியானது.

உறுதிப்படுத்திய நடிகை
பரத்தை விட்டு சிம்ரன் கன்னா பல மாதங்கள் விலகி இருந்தார். ஆனாலும், அவர்களுக்கிடையிலான உறவு மேம்படவில்லை. இறுதியாக, கடந்த 13ஆம் தேதி சிம்ரன் கன்னா தனது கணவரை விவாகரத்து செய்தார். இதுகுறித்து பேசிய சிம்ரன் கன்னா, இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தினார்.

விரோதம் இல்லை
தங்களுக்குள் ஏற்பட்ட இந்த பிரிவு இணக்கமானது என்றும், தங்களுக்கிடையில் எந்த விரோதமும் இல்லை என்றார். மேலும் மகன் குறித்து பேசிய நடிகை சிம்ரன் கன்னா, மகன் வினீத் அவரது தந்தையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் தான் வினீத்தை அடிக்கடி சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

மகன் பிறந்தநாள்
தான் சொன்னது போல், பரத்தும் தானும் தனித்தனி வழிகளில் சென்றோம், ஆனால் எந்தவிதமான வெறுப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் தனது மகனின் பிறந்த கொண்டாடிய சிம்ரன், அவருடன் எடுத்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார்.
வாழ்க்கையின் நங்கூரம்
மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வினீத் கன்னா நீ என் வாழ்க்கையின் நங்கூரம், உன்னுடன் எப்போதும் என் அன்பும் ஆசீர்வாதங்களும் உள்ளன. பிரகாசமாக இந்த பிரச்சனையும் இன்றி வாழ வேண்டும். மார்ச் 21ஆம் தேதி நீ பிறந்தாய். நம்பர் 3, என்னுடைய நம்பர் 3 அது நீதான்.

ஐ லவ் யூ என்னுடைய மம்மி
அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் என்னுடைய வினி.. என்று பதிவிட்டிருந்தார். அவரது அந்த பதிவை பார்த்த வினீத், தெங்க்யூ சோ மச் மம்மி.. ஐ லவ் யூ என்னுடைய மம்மி என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பெற்றோர் விவாகரத்து பெற்றதால் மகன் வினீத் தனது தந்தையுடன் வசிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











