அந்த தயாரிப்பாளர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. டிவி தொடரில் இருந்து விலகிய பிரபல நடிகை புகார்!
மும்பை: தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக சீரியல் நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கலர்ஸ் இந்தி சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடர், சோட்டி சர்தார்னி (Choti Sarrdaarni).
புகழ்பெற்ற இந்த தொடரில் ஹர்லீன் கவுர் என்ற கேரக்டரில் மான்சி சர்மா என்பவர் நடித்து வந்தார். உடல் நலப் பிரச்னை காரணமாக அவர் விலகினார்.

லாக்டவுன்
பின்னர் அந்த கேரக்டரில் இணைந்தார், நடிகை சிம்ரன் சச்தேவா. இவர் சில இந்தி சீரியல்களில் நடித்துள்ளவர். லாக்டவுன் காரணமாக, சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த இரண்டு மாதமாக ரத்து செய்யப்பட்டிருந்தன. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லை. இந்த லாக்டவுன் காரணமாக தயாரிப்பு நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைந்துள்ளன.

குறைந்த சம்பளம்
இதனால் அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகளை மாற்ற தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். புகழ்பெற்ற நாகினி தொடரின் நான்காவது சீசன், விரைவில் முடிய இருக்கிறது. ஐந்தாவது சீசனில் பொருளாதார பிரச்னை காரணமாக, ஏற்கனவே நடித்த முன்னணி நடிகர், நடிகைகளை மாற்ற உள்ளனர். குறைந்த சம்பளம் வாங்கும் நடிகர்களை நடிக்க வைக்க உள்ளனர்.

சம்பளக் குறைப்பு
இந்நிலையில், சோட்டி சர்தார்னி தொடரில், நடிகை சிம்ரன் சச்தேவாவுக்கு 40 சதவித சம்பளத்தை குறைத்து தருவோம் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறியுள்ளனர். இதனால், அந்த தொடரில் இருந்து சிம்ரன் விலகியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, '40 சதவிகித சம்பள குறைப்புக்கு என்னை கட்டாயப்படுத்தினர். இதற்கு முன்னும் சம்பளத்தை சரியான நேரத்துக்கு தரவில்லை.

முரட்டுத்தனமாக
இது தொடர்பாக பல சிக்கல்களை எதிர்கொண்டேன். இது ஒரு புறம் இருந்தாலும் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். மரியாதை இல்லாமலும் முரட்டுத்தனமாகவும் நடந்தார். இதனால் இந்த தொடரில் இருந்து வெளியேறினேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து ட்ரிஷ்டி கேர்வால் என்ற நடிகை அவர் கேரக்டரில் நடிக்கிறார். நடிகை ஒருவர், இப்படி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications