தெய்வமகள் வாணி போஜனை வாரி அணைத்துக்கொண்ட தெலுங்கு சினிமா - சீரியலுக்கு டாட்டா

சென்னை: தெய்வமகள் வாணி போஜன் என்றால் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சன்டிவி, ஜீ தமிழில் அவர் நடித்த சீரியலுக்காக ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த சீரியல் பிரபலத்தால் சினிமா உலகம் வாரி அணைத்துக்கொள்ளவே தெலுங்கு பட உலகில் பிஸியாகி விட்டார் வாணி போஜன். இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதை உதாசீனப்படுத்திவிட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளாராம்.

ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த நடிகர் மாதவன், விவேக், ஷாருக் கான், நடிகை மீனா போன்ற எத்தனையோ பெரிய நடிகர்கள் வெள்ளி திரையில் வந்து ஜொலித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் சீரியல் உலகின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன், தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானார். எத்தனையோ சீரியல் ரசிகர்கள் வாணி போஜனுடைய போட்டோ சூட் படங்களை பார்த்து இணையதளங்களில் அசந்து போனார்கள். அதை தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தவர், தற்போது சீரியல் பக்கமே தலைகாட்ட விரும்பாமல், அதை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

வாணி போஜன்

வாணி போஜன்

சினிமாவில் இருந்து பல வாய்ப்புகள் அவர் கதவை தட்டினாலும், வெயிட்டான வாய்ப்புக்காக காத்திருந்தவர், நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொன்னார். தற்போது அப்படம் படப்பிடிப்பில் இருக்க, தெலுங்கு சினிமாவில் வாணி போஜன் கால் பதித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் வாணி போஜனுக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். இப்படத்தை சமீர் இயக்குகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

தெலுங்கு பட உலகில் பிஸி

தெலுங்கு பட உலகில் பிஸி

தெலுங்கில் மூன்றாவதாக ஒரு படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் அருண் பாண்டியனின் ஏ.பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் வாணி போஜனை அணுகுவது, பம்பர் குழுக்கல் லாட்டரி டிக்கெட் போலே தான் உள்ளது.

நடிகைகளுக்கு பொறாமை

நடிகைகளுக்கு பொறாமை

அறிமுகமான படமே இன்னும் வெளியாகாத சூழ்நிலையில், இப்படி அடுத்தடுத்த படங்களில் ஹீரோயினாக வாணி போஜன் ஒப்பந்தமாவதைப் பார்த்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் சில நடிகைகள் கலக்கம் அடைந்திருக்கிறார்களாம்.

வாணி போஜன் வலம் வருவாரா

வாணி போஜன் வலம் வருவாரா

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகளின் பட்டியலில் வாணி போஜன் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X