»   »  அடுத்தடுத்து தற்கொலை செய்யும் டிவி சீரியல் கலைஞர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

அடுத்தடுத்து தற்கொலை செய்யும் டிவி சீரியல் கலைஞர்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்கொலை செய்து கொள்ளும் சின்னத்திரை கலைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இல்லத்தரசிகள் டிவியும் கையுமாக இருக்க காரணம் நெடுந்தொடர்கள். நெடுந்தொடர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது பவர்கட் ஆனால் மின்வாரியத் துறையினரை கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவார்கள். அந்த அளவுக்கு பலரையும் ஈர்த்துள்ளது டிவி சீரியல்கள்.

டிவி சீரியல்களில் நடிக்கும் கலைஞர்கள் மன அழுத்தத்தால் உயிரை மாய்த்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.

பிரதீப்

பிரதீப்

பாசமலர், சுமங்கலி ஆகிய டிவி சீரியல்களில் நடித்து வந்த பிரதீப் ஆந்திர மாநிலம் ஹைதாராபாத்தில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சபர்ணா

சபர்ணா

சொந்த பந்தம் டிவி சீரியலில் நடித்து வந்த சபர்ணா மதுரவயலில் உள்ள அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்தவர்.

சாய் பிரசாந்த்

சாய் பிரசாந்த்

அண்ணாமலை, செல்வி உள்ளிட்ட ஏராளமான டிவி சீரியல்களில் நடித்த சாய் பிரசாந்த் மன அழுத்தத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

பிரதியுஷா

பிரதியுஷா

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தி டப்பிங் சீரியலான மண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. அவர் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

ஷோபனா

ஷோபனா

டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஷோபனா உடல் நலக்குறைவால் நடிக்க முடியாமல் போனது. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

முரளி மோகன்

முரளி மோகன்

வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நடிகை வைஷ்ணவி

நடிகை வைஷ்ணவி

சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், பணப்பிரச்சினை காரணமாக 2004ம் ஆண்டில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 2006ம் ஆண்டு சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

English summary
Number of TV serial artists who are taking their own lives is increasing day by day. Sumangali serial actor Pradeep is the latest one to join the list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil