Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகையை பலாத்காரம் செய்த டிவி சீரியல் தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை
மும்பை: நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீரா இந்தி தொலைக்காட்சி தொடரின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் முகேஷ் மிஸ்ரா(33). அவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீரா சீரியலில் நடித்த நடிகை ஒருவரை தனது பைக்கில் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ஸ்பாட்டுக்கு வந்த பிறகு மேக்கப் அறைக்கு சென்றுள்ளார் நடிகை(வயது 31). மிஸ்ரா அந்த நடிகையை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன் மகளை கொலை செய்துவிடுவேன் என்று மிஸ்ரா மிரட்டியுள்ளார்.
2013ம் ஆண்டு அந்த நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பத்திரிகையாளரான தனது கணவரிடம் கூற அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து மிஸ்ராவை வெளியேற்றது வீரா தொடர் நிர்வாகம்.
பலாத்கார வழக்கை விசாரித்த நீதிமன்றம் மிஸ்ராவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.