அடப்பாவமே.. சின்னத்திரை படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர், நடிகைகளுக்கு கொரோனா.. ஷூட்டிங் நிறுத்தம்!
மும்பை: சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்களும் மூடப்பட்டன.

சின்னத்திரை படப்பிடிப்பு
இதையடுத்து டிவி சேனல்கள் பழைய நிகழ்ச்சிகள் மற்றும் பழைய டிவி சீரியல்களை ஒளிபரப்பி வந்தன. இந்நிலையில், மகாராஷ்ட்ரா, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்பட சில மாநிலங்களில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கிருமி நாசினி தெளிப்பது, கையுறை, முகக்கவசம் அணிவது என்பது உள்ளிட்ட பாதுகாப்புடன் பல தொடர்களின் ஷூட்டிங் தொடங்கியது.

நவ்யா சுவாமி
இதில் மும்பையில் தொடங்கிய டிவி தொடர்களின் ஷூட்டிங்கில் சில நடிகர், நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தொடர்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதே போல தெலுங்கு படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை நவ்யா சுவாமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர் தமிழ் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர், நடிகைகள்
அவருடன் நடித்த ரவி கிருஷ்ணா என்ற நடிகருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா பீதி காரணமாக இன்னும் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளவில்லை. இதனால் தமிழில் சில தொடர்களில் நடிகர், நடிகைகளை மாற்றியுள்ளனர். இந்நிலையில், இந்தி சின்னத்திரை தொடரில் பங்கேற்ற நடிகர், நடிகை மற்றும் டெக்னீஷியன்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டூடியோவில் ஷூட்டிங்
ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்தி மெகா தொடர், யே ரிஷ்தா கியா கெஹ்லாதா ஹே (Yeh Rishta Kya Kehlata Hai). இந்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த தொடரின் ஷூட்டிங், மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைத்து நடந்து வந்தது. இந்நிலையில் இதில் பங்கேற்ற நடிகர் சச்சின் தியாகி, சமீர் ஓன்கார், நடிகை ஸ்வாதி சிட்னிஸ் ஆகியோர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

கொரோனா பரிசோதனை
இதனால் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டிவி டீமில் இருந்த மற்றவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நான்கு டெக்னீஷியன்களுக்கு பாசிட்டிவ் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். டிவி படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications











