ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினங்களன்று தனியார் சாட்டிலைட் டிவிகளில் வழங்கப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளிலோ அல்லது வேறுஎந்த வகையிலுமோ திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கக் கூடாது என்று தமிழ் நாடுதிரைப்பட பாதுகாப்புக் கழகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு திரையுலகின் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு திரைப்பட பாதுகாப்புக் கழகம்ஆரம்பிக்கப்பட்டது. திரையுலகின் நலனைக் காப்பதற்காக சின்னத் திரையில் யாரும் தோன்றக் கூடாது, பேட்டி கொடுக்கக் கூடாதுஎன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதற்கு சிறிது காலம் வரை பலன்இருந்தது. ஆனால் போகப் போக கட்டுப்பாடுகளை மீறி நடிகர், நடிகைகள் பேட்டி கொடுக்க ஆரம்பித்தனர்.

கட்டுப்பாடுகளை மீறியதாக சில நடிகர்,நநிடிகைகளுக்கு பாதுகாப்புக் கழகம் தடை விதித்தது. பின்னர் அவர்கள் மன்னிப்புகேட்டு கடிதம் கொடுத்ததால் தடை நீக்கப்பட்டது. ஆனால் சமீப காலமாக நடிகர், நடிகைகள் அதிக அளவில் சின்னத் திரைநிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த தீபாவளியன்று டிவி சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் முக்கால்வாசிப் பேர் முன்னணி நட்சத்திரங்கள்தான். இதுதிரைப்பட பாதுகாப்புக் கழகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.

இதையடுத்து சிம்ரன், சிலம்பரசன், டி.ராஜேந்தர், ரேவதி உள்ளிட்ட 25 நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் மற்றும் இயக்குனர் சங்கத்திற்கு கடிதம்அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த தீபாவளி நிகழ்ச்சிகளை ஸ்டார் விஜய் டிவியில் சிம்ரன் தான் நாள் முழுவதும் தொகுத்துவழஙகினார். இதற்காக அவருக்கு பெரும் தொகை தரப்பட்டது.

விதியை மீறிய இந்த நடிகர்கள், இயக்குனர்கள் தரும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என்று பாதுகாப்புக் கழகம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் வருகிற 25ம் தேதி பாதுகாப்புக் கழகத்தின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர்பான டிவி நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலகினர் யாரும்பங்கேற்கக் கூடாது. பங்கேற்போர் மீது கடும் நிடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் செல்வின்ராஜ் எச்சரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X