ஹீரோ .. ஹீரோ ..
தமிழ்நாடு திரைப்பட பாதுகாப்புக் கழகத்தின் கடும் எச்சரிக்கை காரணமாக, புத்தாண்டு சிறப்பு டிவி நிகழ்ச்சிகளில்வெள்ளித் திரை நட்சத்திரங்களை அதிகம் காண முடியவில்லை.
இதனால் சாட்டிலைட் டிவிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொலிவிழந்து காணப்பட்டன. திரைப்பட நடிகர்,நடிகையர் யாரும் பேட்டி கொடுக்கவில்லை. எனவே பழைய பேட்டிகளை தூசு தட்டி ஒளிபரப்ப வேண்டியநிலைக்கு டிவி நிர்வாகங்கள் தள்ளப்பட்டன.
ஜெயா மற்றும் விஜய் டிவியில் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையின் திரைப்பட விருது வழங்கும் விழா மற்றும்நட்சத்திரக் கலை விழாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இல்லாத நிலையில், ஏற்கனவே காட்டிய திரைப் படங்களைப்போட்டுத் தான் ரசிகர்களை திருப்திப்படுத்தின சாட்டிலைட் டிவிகள். சமீபத்தில் வெளிவந்த கார்மேகம் படத்தைஜெயா டிவி ஒளிபரப்பியது.
மொத்தத்தில், சாட்டிலைட் டிவிகளில் கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த ஆண்டு புத்தாண்டுக்கொண்டாட்டம் பொலிவிழந்து காணப்பட்டதை மறுக்க முடியாது.


Click it and Unblock the Notifications