»   »  டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் காதலனுடன் எஸ்கேப்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் காதலனுடன் எஸ்கேப்

Subscribe to Oneindia Tamil

தனியார் டிவியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்ரீவித்யாவை அவரது காதலனும், முன்னாள் அமைச்சரின்அக்கா மகனும் காரில் கடத்திச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள டவர் பிளாக்கில் வசிப்பவர் மோகன் ராம். இவரது மகள் ஸ்ரீவித்யா (22).இவர் தனியார் டிவி ஒன்றில் தேன்கிண்ணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அதே டிவியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் நாதன் (25). இவர்கள் இருவருக்கும் காதல்ஏற்பட்டது.

இந்தக் காதலுக்கு ஸ்ரீவித்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந் நிலையில் ஸ்ரீவித்யா அவரதுதாயாருடன் கோயிலுக்குச் காரில் சென்றார். காரை ஸ்ரீவித்யாவே ஒட்டினார். பின்பு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டனர்.

சரியாக 2 மணிக்கு கார் வீட்டை நெருங்கியது. அப்போது வீட்டின் எதிரே மாருதி ஜென் கார் ஒன்று நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த ஸ்ரீவித்யா, தன்னுடைய காரை அந்த கார் அருகில் நிறுத்தினார்.

நிறுத்திய மறு நிமிடம் கீழே இறங்கிய ஸ்ரீவித்யா, அங்கு நின்றிருந்த மாருதி காரில் ஏற முயன்றார். இதைச் சற்றும்எதிர்பார்க்காத அவரது தாயார், ஸ்ரீவித்யாயை தடுக்க முயன்றார். ஆனால் காரில் இருந்த நாதன், அவர் நண்பர்கோகுல் இருவரும் ஸ்ரீவித்யா கையைப் பிடித்து இழுத்து போட்டுக் கொண்டு பறந்தனர்.

இதை அறிந்த மோகன்ராம் அதிர்ச்சியடைந்தார். பிறகு மோகன் ராம் மனைவியுடன் அபிராமபுரம் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார்.

அதில் நாதனும், முன்னாள் அமைச்சரின் அக்கா மகனும், ஸ்ரீவித்யாவை காரில் கடத்திச் சென்று விட்டனர்.எனவே தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஸ்ரீவித்யா உட்பட மூவரையும் தேடி வருகின்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil