»   »  எஸ்கேப் ஆன டிவி நடிகை சிக்கினார்-டும் டும் ஓவர்

எஸ்கேப் ஆன டிவி நடிகை சிக்கினார்-டும் டும் ஓவர்

Subscribe to Oneindia Tamil

காதலனால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜெயா டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்ஸ்ரீவித்யா மற்றும் அவரது காதலர் நாதனை போலீஸார் கண்டுபிடித்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.

சென்னை நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராம். இவரது மகள் ஸ்ரீவித்யா.கல்லூரியில் பணியாற்றும் ஸ்ரீவித்யா, ஜெயா டிவியில் தேன் கின்னம் நகழ்ச்சியைதொகுத்து வழங்கி வந்தார்.

அதே டிவியில் வேலை பார்த்து வரும் நாதன் என்பவருக்கும், ஸ்ரீவித்யாவுக்கும்இடையே காதல் மலர்ந்தது. இந் நிலையில் கடந்த 3ம் தேதி ஸ்ரீவித்யாவின் தாயார்கண் முன்பாக, கோவிலில் வைத்து ஸ்ரீவித்யாவை கார் ஒன்றில் ஏற்றி அழைத்துச்சென்றார் நாதன்.

இதையடுத்து தனது மகளை நாதன் கடத்திச் சென்று விட்டதாக மோகன்ராம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் இருவரையும் போலீஸார்தீவிரமாக தேடி வந்தனர்.

அவர்களது விசாரணையில் இருவரும் திண்டுக்கல்லில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று இருவரையும் சென்னைக்குஅழைத்து வந்தனர். பின்னர் இருவரையும் சைதாப்பேட்டை 23வது குற்றவியல்நீதிம்ன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற வளாகத்தில் ஸ்ரீவித்யா கூறுகையில், நாதனும், நானும் காதலித்து வந்தோம்.இந்தக் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்தான் நான்திண்டுக்கல்லுக்கு நாதனுடன் சென்றேன். எங்களுக்கு அங்கு வைத்து கல்யாணம்நடந்து விட்டது என்றார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் காதலனுடன் எஸ்கேப்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil