உங்க கூட டான்ஸ் ஆடணும்.. ஒன் லாஸ்ட் டான்ஸ்லாம் இல்லை.. தளபதி விஜய் டான்ஸை அடிக்கடி பார்க்கலாம் போல!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். 2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கியதுமே மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் இப்போது களமிறங்கவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அக்கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதில் விஜய் உற்சாகமாக நடனம் ஆடினார்.
விஜய் தனது ரசிகர்களின் கோரிக்கைபடியும், தன்னுடைய ஆசைப்படியும் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய வருடத்திலேயே மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. எனவே அந்த வருடத்திலேயே தேர்தலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அனுபவம் இல்லாததாலும்; அரசியல் களத்தின் சூழலை புரிந்துகொள்ள வேண்டியிருந்ததாலும் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.
பாராட்டும் விமர்சனமும்: தொடர்ந்து பல அரசியல் மேடைகளில் இத்தனை வருடங்களில் ஏறிவிட்டார். தான் ஏறிய அத்தனை மேடைகளிலும் தமிழ்நாட்டை ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்துவருகிறார். அதற்கு திமுகவினரும் தங்களது பதிலடியை கொடுத்துவருகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க விஜய் தனது கரியரின் உச்சத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும் எனவும் பலர் சொல்வது குறிப்பிடத்தக்கது.

கரூர் துயர சம்பவம்: விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு அவருக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது என்றால் கரூர் துயர சம்பவம்தான். அவர் தாமதமாக அந்தக் கூட்டத்துக்கு சென்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். அதுதொடர்பான விசாரணையை இப்போது சிபிஐ செய்துவருகிறது. சமீபத்தில்தான் விஜய்யை நேரில் அழைத்து இரண்டு முறை விசாரணை செய்தது. அதில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாக விஜய் பதிலளித்தார் என்று தெரிகிறது.
ஜனநாயகன் பிரச்னை: அதேபோல் ஜனநாயகன் படமும் விஜய்க்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் நீதிமன்றத்துக்கு சென்றது படக்குழு. ஆனால் நீதிமன்றமும் இழுத்தடிப்பதால் கடந்த மாதமே வெளியாகியிருக்க வேண்டிய படம் இன்னமும் வெளியாகவில்லை. விஜய்யின் அரசியல் வருகையால் இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்ததுதான் என்றாலும் இவ்வளவு நெருக்கடி வரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
மூன்றாவது ஆண்டு தொடக்க விழா: இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் இருக்கும் அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. இதில் விஜய்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது பின்னணி பாடகர் விஜய்யை புகழ்ந்து பாடல் பாடினார். அதனை கேட்டு வைபான விஜய் மேடையிலேயே குட்டி நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications