சிஸ்டத்தை மாத்த நினைச்ச ரஜினியை திமுக முடக்கியது.. திடீரென ஆதவ் அர்ஜுனா என்ன இப்படி இழுக்குறாரே!

சென்னை: திமுக அரசை கண்டித்து இன்று தவெகவினர் திடீரென போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். தலைவர் விஜய்யை தவிர ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். வழக்கம் போலவே மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக கண்டித்து விஜய் ஒரு ட்வீட் மட்டுமே போட்டு தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.

காக்கா vs கழுகு சண்டை போட்டு ஏற்கனவே ரஜினிகாந்த் ரசிகர்களை வம்பிழுத்து வைத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா சூப்பர் ஸ்டாரை எப்படி எங்க பக்கம் இழுக்கிறோம் பாருங்க என அவரை இழுத்துவிட்டுப் பேசியுள்ளார்.

TVK Aadhav Arjuna says DMK is the main reason for Rajinikanth not come to politics

திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அரசியலுக்கு வர நினைத்த ரஜினிகாந்தை வரவிடாமல் செய்து விட்டனர் என ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

சிஸ்டம் சரியில்லை: நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இப்போ இல்லைன்னா எப்போவும் இல்லை என திடீரென சிஸ்டம் சரியில்லை என அரசியலுக்கு வரப்போவதாக முழங்கினார். ஆனால், சில மாதங்களிலேயே தனது ஆன்மிக அரசியல் நிலைப்பாட்டை கைவிட்டு சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களில் நடித்து வருகிறார் என ட்ரோல் செய்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களும் தவெகவினரும் திடீரென தற்போது ரஜினிகாந்த்தை ஆதரவுக்கு இழுக்கின்றனரா என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்தை மிரட்டினார்கள்: திமுக குடும்பம் தான் சிஸ்டம் சரியில்லை என அரசியலுக்கு வர நினைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மிரட்டி அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்து விட்டனர். ரஜினிகாந்தை நாங்க விமர்சிக்கவில்லை. அவரை போலவே தற்போது பல எதிர்ப்புகளை கடந்து எங்க தலைவர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் என ஆதவ் அர்ஜுன் பேசியுள்ள வீடியோ காட்சிகளை வைரலாக்கி ட்ரோல் செய்து வருகின்றனர்.

கலாய்க்கும் ரசிகர்கள்: ரஜினிகாந்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதை உங்க தலைவர் விஜய் கொடுத்திருந்தால் இந்நேரம் கண்டிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் உங்களுக்கு சப்போர்ட்டாக இருந்திருப்பார்கள். ஆனால், அவரை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்தளவுக்கு அசிங்கப்படுத்தியது எல்லாமே உங்க ரசிகர்கள் தான் இப்போ தேர்தல் நெருங்கும் போது மட்டும் ஆதரவு தேடுறீங்களே ஆதவ் அர்ஜுனா இதெல்லாம் சரியா? என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X