உலக நாயகனைப் போல விஜய்யும் ரூ 500 கோடிக்கு விலை போயிருக்கலாம்.. புள்ளி வைத்து பேசிய பிரபலம்!

சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று அதாவது நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைக் குழுச் செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என பலரையும் அட்டாக் செய்து பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விஜய் மற்றும் அவரது கட்சி நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒரு மாதமாக வீடு, கட்சி அலுவலகம் என்றே முடங்கி இருந்தார் விஜய். கடந்த வாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதற்கு முன்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நஷ்ட ஈடாகவும் வழங்கினார்.

TVK Aadhav Arjuna Slams Kamal Haasan and Rajinikanth Indirectly at TVK General Body Meeting
Photo Credit:

ரெட் ஜெயிண்ட்: இப்படி இருக்கும்போது, இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியில் தேர்தல் மேலாண்மைக் குழுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் பல விஷயங்களை முன் வைத்தார். குறிப்பாக அவர் பேசும்போது ஆளும் திமுக அரசை கடுமையாக சாடிப் பேசினார். அதாவது, " அடுத்த 100 ஆண்டுகளுக்கும் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் கவனித்திருந்தால் தெரியும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சினிமா உலகில் இருக்கக்கூடிய பெரிய பெரிய ஸ்டார்களும் உலக நாயகன்களும் ரெட் ஜெய்ண்ட்டில் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு சினிமாவுக்கு போய்விட்டார்கள்.

500 கோடிக்கு: எங்க தலைவர் நினைத்திருந்தால் இதே ரெட் ஜெயண்ட்டில் ரூபாய் 500 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு என்னவோ செய்யுங்கள் என்று போயிருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் உங்களை ( திமுகவை) ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வந்துள்ளார் என்ற கோபம் தானே உங்களுக்கு. யாருமே உங்களை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது. பிறப்பால் ஒருவர் முதலமைச்சர் ஆகக் கூடாது என்று நான் கூறினேன் அல்லவா, அதுதான் நெபுடிசம்" என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

TVK Aadhav Arjuna Slams Kamal Haasan and Rajinikanth Indirectly at Vijay TVK General Body Meeting

கமல்ஹாசன்: உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அன்றைக்கு ஆட்சியில் இல்லாத திமுகவை எதிர்த்து தான் அவரது பிரச்சாரம் இருந்தது. அதன் பின்னர் அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு அங்கமாக மாறிப்போனார். அதை மனதில் வைத்தும் கமல்ஹாசனின் படங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்துதான் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியுள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X