TVK Vijay: விஜய் வரல.. அதிமுக நடிகரை தட்டித்தூக்கிய தவெக வேட்பாளர்.. இது புதுசா இருக்குண்ணே!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 232 வேட்பாளர்களும் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் 234 தொகுதிகளும் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பிரச்சாரம் செய்வார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பிறகு தான் அவரது பிரச்சாரத்தையே தொடங்கினார். இப்படி இருக்கையில் பிரச்சாரத்தை தொடங்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதனால் விஜய் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து அவரது வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பது என்பது சிரமமான விஷயம் என்பது கண்கூடாக தெரிகிறது. இப்படி இருக்கையில் பல வேட்பாளர்கள் விஜய் போன்று உருவத்தில் இருக்கக்கூடிய நபரை விஜய் போல மேக்கப் செய்து அவர்களது பிரச்சார வாகனத்தில் ஒரு அங்கமாக நிற்க வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிலர் விஜய் போன்ற உருவ பொம்மையை செய்து அதை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் சில அட்டை படத்தை வைத்து எல்லாம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

TVK Candidates Use Vijay Lookalikes for Campaign Netizens Troll as Ramarajan Extends Support

பிரசாரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களில் ஒருவரான விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் பிரசாரம் செய்துள்ளார் இது தொடர்பாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்காக விஜயைத் தவிர மற்ற அனைவரும் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கிண்டலடித்து வருகிறார்கள்.

ராமராஜன்: அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அதிமுகவின் முன்னாள் எம்.பியும் நடிகருமான ராமராஜன் கூறுகையில் என்னுடைய குடும்ப நண்பர் விபின் சக்கரவர்த்தி அவருக்காக வாக்கு கேட்பது என்பது என்னுடைய கடமை. அவர் குடும்பத்திற்கு நான் செய்யக்கூடிய நன்றி கடன், நான் அதிமுகவில் தான் தொடர்ந்து தொண்டனாக இருக்கிறேன். அப்படி இருக்கையில் விபின் சக்கரவர்த்திற்கு நான் வாக்கு கேட்க காரணம், என் தம்பி மகனுக்கு வாக்கு கேட்பது என்னுடைய கடமை என்று தெரிவித்துள்ளார். நடிகர் ராமராஜன் இதற்கு முன்னர் அதிமுகவின் சார்பில் 1998ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X