விஜய் வீடு இடிக்கப்படுமா? மிரட்டும் விஷமிகள்.. அந்தணன் சொல்வது என்ன!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய், நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது எனவே நீட் தேர்வு தேவையில்லை என பேசி இருந்தார். இவரின் இந்த அதிரடியான பேச்சு குறித்து வலைபேச்சு அந்தணன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
சென்னை திருவான்மியூரில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அதில், நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வில் நான் மூன்று முக்கியப் பிரச்சினைகளைக் காண்கிறேன். முதலாவதாக நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது. கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலில் இருந்தது. அதை எப்பொழுது ஒன்றிய அரசு பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வந்ததோ அப்போதுதான் இந்த சிக்கல் ஏற்பட்டது என பேசி இருந்தார்.இவரின் இந்த பேச்சு காங்கிரஸ், திமுக,நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சினிமா விமர்சகரான அந்தணன் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அதில், நீட் தேர்வு குறித்து விஜய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் திடீரென திமுகவின் செயலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. இன்னும் சிலர் அவர் திமுகவில் கூட்டணி வைத்துக்கொள்ள போகிறார் என்றெல்லாம் செய்தி பரவி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.
விஜய் வீடு இடிக்கப்படுமா: விஜய் நீட் குறித்து பேசியதும், ஒன்றியம் என்றதும், பாஜவினரை காயப்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால், சில பாஜகவினர் ஆதரவாளர் பல செய்திகளை இணையத்தில் பரப்பி வருகின்றனர். அதில், விஜயின் வீடு நீலாங்கரையில் உள்ளது. இந்த வீடு கடல் தொலைவில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் இதனால், சட்டப்பூர்வமாக இந்த வீட்டை இடிக்கும் நடவடிக்கை வரும் என்றும், திமுக உன் வீட்டை இடித்துவிடுவோம் என்று சொன்னதால் தான், அவர் தமிழக சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து பேசுவதாக ஒரு கருத்து பரவி வருகிறது.
எதையாவது பேசலாமா: இப்படி செய்தி பரப்புபவர்கள் விஜய் வீட்டை பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஏன் என்றால், விஜய் வீடு இருக்கும் பகுதியில் கடலை ஒட்டியே பல பங்களாக்கள் இருக்கின்றன. அப்படி பார்க்கையில் விஜய்யின் வீடு கொஞ்சம் தள்ளித்தான் இருக்கு. அதே இடத்தில் தான் இயக்குநர் பாரதி ராஜா வீடும், முதல்வரின் மருமகன் சபாரீசன் வீடும் அங்கே தான் இருக்கு. அப்படி இருக்கும் போது விஜய் வீட்டை மட்டும் இடித்தால் நாள் நாளைக்கு பிரச்சனை வராதா, மக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? இப்படி இருக்கும் போது, எதையாவது கிளப்பி விடவேண்டும் என்று பேசுவது சரியா.இதற்கு காரணம் அந்த விழாவில் விஜய் சொன்ன அந்த ஒன்றியம் என்கிற வார்த்தை பாஜகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது தான்.
அரசியல் கட்சிகள் குழப்பம்: பொக்லைன் அரசியல் உத்தரபிரதேசத்தில் இருக்கு, அதை தமிழக அரசியலில் நுழைத்து, விஜய்க்கும் விஜய் கட்சிக்கும் ஒரு மிரட்டலை கொடுத்திருக்கிறார்கள். இதைப்பார்க்கும் போது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், நீட் குறித்து விஜய் பேசிய அரசியல் கட்சியினர் சிலரை குழப்பம் அடையச் செய்துள்ளது என்று அந்தணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











