இஃப்தார் நோன்புக்கு விஜய் எப்படி வந்திருக்காரு பாருங்க.. இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை அள்ளிடுவாரு போல!
சென்னை: தளபதி விஜய் சினிமாவில் இருந்து சீக்கிரம் விலக உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்ற லுக்கில் விஜய் வந்ததை பார்த்த தளபதி ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஜோசப் விஜய் என நடிகர் விஜய்யை கிறிஸ்துவர் என்று அடையாளப்படுத்தினாலும் அவர் மதங்களை கடந்த மனிதர் என்பதை தனது சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே அடையாளப்படுத்திக் கொண்டுதான் வருகிறார்.

எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையுடன் வாழ்ந்து வரும் விஜய் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதோ அர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த நிகழ்ச்சியின் நேரலையில் ஒளிபரப்பி வருகிறார்.
தலையில் தொப்பியுடன் தளபதி: சமீபத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என்பது விமர்சனத்திற்குள்ளானது. எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ஜனநாயகம் படத்தில் நடித்து வருவதால் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் விஜய் தலையில் தொப்பி மற்றும் வெள்ளை லுங்கியை அணிந்து கொண்டு இஸ்லாமியர் போலவே பங்கேற்றது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நோன்பு திறப்பு நிகழ்ச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இஸ்லாமிய தோழர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ள காட்சிகள் வீடியோக்களாகவும் விஜய் வருகை தந்து ரசிகர்களை பார்த்த கையசைத்த ஸ்க்ரீன்ஷாட்டுகளாகவும் ஷேர் செய்து ட்விட்டரில் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.
கடுமையான விமர்சனங்கள்: விஜய் எப்போதெல்லாம் அரசியல் தலைவராக பொது இடத்திற்கு வருகை தருகிறாரோ அப்போதெல்லாம் அவர்மீது ஏகப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். கடைசியாக விஜய் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக வாட் ப்ரோ வெரி ராங் ப்ரோ என பேசியதை வைத்து விஜய்யை அண்ணாமலை, சரத்குமார் என பலர் கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











