சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நல்லா இருக்காரு.. தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு இதோ!

சென்னை: செப்டம்பர் 30ம் தேதியான நேற்று இரவு திடீரென நடிகர் ரஜினிகாந்த் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும் இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என புதிய அறிக்கை வெளியாகி ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்திருக்கிறது. தவெக தலைவரும் நடிகருமான விஜய்யும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பதிவு ஒன்றை தற்போது பதிவிட்டுள்ளார்.

73 வயதிலும் இந்திய சினிமாவே சூப்பர் ஸ்டார் என வியந்து அழைக்கும் இடத்தில் இன்னமும் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக திகழும் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது வேட்டையன் படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

rajinikanth vijay super star

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்திலும் நடித்து வந்த நிலையில், திடீரென அவருக்கு வயிற்றில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ரத்த நாளத்தில் வீக்கம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பதை மருத்துவர்கள் பரிசோதனை மூலம் கண்டறிந்தனர். அதன் பின்னர், இன்று அவருக்கு ஸ்டன்ட் கருவி பொறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் சாய் சதீஷ் தகவல் தெரிவித்திருந்தார். அப்பல்லோவின் அறிக்கை தற்போது வெளியாகி உள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.

2 நாட்களில் டிஸ்சார்ஜ்: அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் மாற்றப்பட்டு ஓய்வெடுத்து வருவதாகவும் இன்னும் 2 நாட்களில் அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதிவு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சமூக வலைதள பக்கங்களில் ரஜினிகாந்த் சீக்கிரமே பூரண குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பதிவிட்டு இருந்தனர். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் காலை முதலே ரஜினிகாந்த் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரஜினி விரைவில் வீடு திரும்புவார் நம்ம தலைவருக்கு ஒன்றும் ஆகாது என பதிவுகளை போட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

rajinikanth vijay super star

ஓய்வு தேவை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் கூலி படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், சில நாட்கள் சூப்பர் ஸ்டார் ஓய்வெடுத்து விட்டு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்றும் மற்றவர்களின் போர்ஷன்களை லோகேஷ் எடுத்தால் நல்லா இருக்கும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விஜய் சொன்னதை பாருங்க: ”மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்.” என நடிகரும் தவெக தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளது ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X