ராஜநடை.. தளபதி கோஷம் தெறிக்குது.. தவெக கொடியை பட்டன் தட்டி ஏற்றிய விஜய்.. தொண்டர்கள் குஷி!

சென்னை: நடிகராக தமிழ் சினிமாவில் 68 படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ள விஜய் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தனது கடைசி படமான 69வது படத்தையும் கொடுக்க காத்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக விஜய் நடிக்கும் படங்களை பார்க்க மக்கள் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று டிக்கெட் வாங்கி அவருக்கு இப்படியொரு இடத்தை தமிழ்நாட்டில் கொடுத்துள்ள நிலையில், அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்த நடிகர் விஜய் உடனடியாக கட்சியை ஆரம்பித்து இன்று தனது முதல் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தியுள்ளார்.

விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மாநாட்டு நிகழ்ச்சியில் விஜய் தொண்டர்களை அருகே சென்று சந்தித்து பேசும் வகையில் பிரம்மாண்டமாக 800 மீட்டருக்கு ரேம்ப் வாக் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இந்நிலையில், விழா மேடைக்குச் செல்வதற்கு முன்னதாக நடிகர் விஜய் அந்த ரேம்ப் வாக்கில் தொண்டர்களை சந்திக்க பலரும் கட்சிக் கொடி நிற சால்வையை அவருக்கு தூக்கி வீச, அதையெல்லாம் மாலையாக அணிவித்துக் கொண்டு மேடையேறிய தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பட்டன் தட்டி ஏற்றி வைத்தார். பிரம்மாண்டமான அந்த கொடி மாநாட்டின் நடுவே உயர பறந்துக் கொண்டிருக்கிறது.

தலைவர் விஜய்: அறிமுகம் விஜய், இளந்தென்றல் விஜய், இளைய தளபதி விஜய், தளபதி விஜய் என நடிகர் விஜய் இத்தனை ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் நிலையில், 250 கோடி ரூபாய் சம்பளத்தையும் வேண்டாம் என தூக்கிப் போட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கி இன்று முதல் மாநாட்டை நடத்தி தலைவர் விஜய்யாக மாறியுள்ளார்.

100 அடி உயரத்தில் கொடி பறக்குது: எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக மக்களுக்கு சேவையாற்றியுள்ளனர். சினிமா பிரபலங்கள் பலரும் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற பிரபலங்கள் அரசியலில் முயற்சித்து பெரிதும் வெற்றியை காணவில்லை. விஜயகாந்த் கட்சியைத் தொடங்கி எதிர்க்கட்சி தலைவராகவே மாறினார். ஆனால், அவரது உடல்நலக்குறைவு அவருக்கு பெரும் பின்னடைவாக மாறியது. இந்நிலையில், நடிகர் விஜய் அந்த வரிசையில் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல தலைவராக புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். சற்றுமுன் 100 அடி உயரத்தில் தவெக கொடி தாறுமாறாக பறக்கிறது.

லட்சக் கணக்கில் ரசிகர்கள்: அதுவரை விஜய் முகத்தில் சிரிப்பு இல்லாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்கிற பதற்றம் காணப்பட்டு வந்த நிலையில், கொடி பறந்த பின்னர், லட்சக் கணக்கான ரசிகர்களை கண்ட நிலையில், அவரது முகத்தில் சிரிப்பு தென்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழியுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடங்கியுள்ளது. தளபதி விஜய் பேசுவதை கேட்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சோஷியல் மீடியா மற்றும் அனைத்து தமிழக ஊடகங்கள், அரசியல் தலைவர்களின் பார்வை என அனைத்துமே விஜய்யின் மாநாட்டை டார்கெட் செய்தே இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X