தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராச்சே.. ஓட்டுப் போடாமல் விட்டுடுவாரா.. சென்னைக்கு விரைந்த விஜய்!
சென்னை: நடிகர் விஜய்யாக இருக்கும் போதே தேர்தல் நேரத்தில் ஷார்ப்பாக வந்து தனது வாக்கை செலுத்தி விடுவார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியுள்ள நிலையில், வாக்கு செலுத்தாமல் விட்டு விடுவாரா என ரசிகர்கள் தற்போது நடிகர் விஜய் விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்துக்கு காரில் விரைந்த வீடியோவை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மீடியா முழுவதும் நடிகர் விஜய்யின் வீட்டுக்கு முன்னால் தவமாய் தவமிருப்பது போல நடிகர் விஜய் இந்த முறை சைக்கிளில் வருவாரா? அல்லது காரில் வருவாரா? எப்படி வரப் போகிறார் என காத்துக்கிடக்கின்றனர்.

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் துபாய் வழியாக ரஷ்யா சென்றிருந்தார். இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் கிளம்பிய விஜய் தற்போது சென்னைக்கு திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் மீம்ஸ்: நடிகர் அஜித், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலேயே வாக்கு செலுத்திய நிலையில், நடிகர் விஜய் இன்னமும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறார் என அஜித் ரசிகர்கள் மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஆனால், ஓட்டுப் போடுவதற்காக வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் பறந்து விஜய் வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் வீட்டின் முன்: அனைத்து மீடியாக்களும் நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீட்டின் முன் கேமரா கண்களுடன் காத்துக் கொண்டிருக்கிறது. நடிகர் விஜய் சற்றுமுன் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை வந்து விட்டதாக வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. விரைவில் ஓட்டுப் போட வருவார் விஜய் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்: நடிகர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ள நிலையில், எப்படி ஓட்டுப் போட வராமல் போய் விடுவார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் தற்போது நடிகர் விஜய் ரஷ்யாவில் இருந்து சென்னை வந்து விட்டார் என்கிற தகவல் அறிந்து உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய் ஓட்டுப் போட வந்தால் ஒட்டுமொத்த டிரெண்டும் எங்க தளபதி தான் என ட்வீட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











