விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்கவில்லையா?.. அதனால்தான் டார்கெட்டா?.. தவெக முக்கிய தலைகட்டு ஓபன்

சென்னை: நடிப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரது பெர்சனல் வாழ்க்கை அரசியலுக்கு வந்த பிறகு டேமேஜ் ஆகியிருக்கிறது. அதுவும் 26 வருடங்கள் அவருடன் குடும்பம் நடத்திய மனைவியே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து பெயரை குறிப்பிடாமல் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.

நடிகர் விஜய் தனது ரசிகர்களின் ஆசைப்படியும், தனது ஆசைப்படியும் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டார். அலப்பறையே இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி இன்று தமிழ்நாட்டில் கவனம் பெற்ற கட்சியாக மாறியிருக்கிறது. பலரும் விஜய் தொண்டர்கள் குறித்து தரக்குறைவாக பேசினாலும் அவர்கள் தொடர்ந்து விஜய்யுடனேயே நிற்கிறார்கள். ஆனால் அது சங்கீதா விஷயத்தில் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. தங்கள் தலைவர் மீது எப்படி குற்றச்சாட்டு வைக்கலாம் என கேள்வி கேட்டு சங்கீதாவை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார்கள்.

TVK Leader Aadhav Arjuna Breaks Silence on Vijay Sangeetha Controversy
Photo Credit:

திமுகவின் சதி?: அதேபோல் அவர்களது வாயிலிருந்து தவறாமல் வரும் 'இது திமுகவின் சதி' என்ற வாக்கியமும் தவறாமல் வந்துவிட்டது. முரசொலி செல்வம் மறைந்த போதிலிருந்தே இதற்கான பிளானை திமுகவினரும், சங்கீதாவும் சேர்த்து போட்டுவிட்டார்கள் என புது தியரியை உருவாக்கினார்கள். ஆனால் அவர்களது பேச்சை யாரும் கொஞ்சம் கூட ஏற்கவில்லை. அனைத்துக்கும் முட்டு கொடுத்தே பழகியவர்கள்; விஜய், திரிஷா ஒன்றாக வந்ததற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்கள். ஒருவழியாக விஜய் ரசிகர்கள் கொஞ்சம் தெளிவாக ஆரம்பித்துவிட்டார்கள் என மற்றவர்கள் நிம்மதியடைந்தார்கள்.

சங்கீதாவின் தொடர் தாக்குதல்: விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக வந்த அடுத்த நாளே சங்கீதா மீண்டும் நீதிமன்றம் சென்றார். 'நீலாங்கரை வீட்டில் என்னை தங்குவதற்கு விஜய் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என கோரி புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். இது மேற்கொண்டு விர்ச்சுவல் வாரியர்ஸுக்கு கடுப்பையும், சோகத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தின. இது அடங்குவதற்குள், விஜய்யோ, 'இந்தப் பிரச்னையை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ஃபீல் செய்யாதீர்கள். இதெல்லாம் அவ்வளவு வொர்த் இல்லை' என அலட்சியமாக பேசியது அவருக்கு எதிரான மன நிலைமையை மேலும் திடமாக்கியிருக்கிறது.

Also Read
சமந்தா, த்ரிஷாவை Homewrecker என சொல்வது சரியா?.. ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே.. அப்போ ஆண்கள்?
சமந்தா, த்ரிஷாவை Homewrecker என சொல்வது சரியா?.. ஆவதும் பெண்ணாலே.. அழிவதும் பெண்ணாலே.. அப்போ ஆண்கள்?

இவ்வளவு அலட்சியமா?: 25 வருடங்கள் குடும்பம் நடத்தி, இரண்டு பிள்ளைகளை பெற்று, உங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராகவும் இருந்து, நீலாங்கரை பங்களாவின் உள் அலங்காரத்தை பார்த்து பார்த்து செதுக்கிய ஒருவர்; வொர்த் இல்லையா?.. மனைவியையே இப்படி செய்யக்கூடியவருக்கு; நாளை தமிழ்நாட்டு மக்களும் வொர்த் இல்லாமல் போய்விடுவார்கள் என அவரை சகட்டுமேனிக்கு விளாசிவருகிறார்கள். இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பிரச்னை குறித்து பேசியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா பேசியது: அவர் பேசுகையில், "என்னுடைய குடும்பத்தையும் மீறிதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன் என அவர் அறிவித்துவிட்டார். அதற்காகத்தான் இவ்வளவு பிரச்னைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கிறார். அதுதான் உண்மை. இது எனது வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. தவெக மேடைகளில் நான் கொஞ்சம் உண்மைகளை பேசுவேன். அது மக்களிடம் கனெக்ட் ஆகும்போது திமுக தூண்டுதலில் யாரோ வந்து என்னையும், குடும்பத்தையும் திட்டுவார்கள். எனக்கே இப்படி என்றால் தளபதி விஜய்க்கு எவ்வளவு இருக்கும்?" என்றார். அவரது இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவில் ட்ரெண்டகியுள்ளது. ஆதவ் அர்ஜுனா சொல்வதை பார்க்கையில் விஜய் அரசியலுக்கு வந்தது சங்கீதாவுக்கு பிடிக்காமல்தான் இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்தாரா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்; ஆதவ் சொல்லும் கருத்தில் உண்மை இருக்க வாய்ப்புள்ளதா என்றும் யோசனையில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X