Vijay: டெல்லி கணேஷ் மறைவு.. பேரிழப்பு என வேதனையை வெளிபடுத்திய தளபதி விஜய்!

சென்னை: ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகையும் இன்றைக்கு சோகத்தில் ஆழ்த்தியுள்ள விஷயம் என்றால் அது நடிகர் டெல்லி கணேஷின் மறைவுச் செய்திதான். நேற்று அதாவது நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவே, டெல்லி கணேஷ் மறைந்துவிட்டார். இருப்பினும் தகவல்கள் இன்று காலையில் இருந்துதான் பலருக்கும் தெரியவந்ததால், பல நட்சத்திரங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது வீட்டிற்குச் சென்று வருகின்றனர். மேலும் பல முன்னணி நடிகர்கள் அவரது மறைவுக்கு தங்களது இரங்கலை தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ் நாடகத்தில் இருந்து அதன் பின்னர் சினிமாவுக்கு வந்தவர். நகைச்சுவைக் கதாபாத்திரம், அதையொட்டிய குணச்சித்திர கதாபாத்திரம் என 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருங்கியவரான டெல்லி கணேஷ், கமல்ஹாசனின் மிகவும் முக்கியமான படங்களில் இடம் பெற்றுவிடுவார். இவர் தக்‌ஷினா பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடக சபாவில் உறுப்பினராக இருந்ததால் இவருக்கு டெல்லி கணேஷ் என பெயர் ஏற்பட்டது.

vijay delhi ganesh delhi ganesh death

டெல்லியில் 1964 முதல் 1974ஆம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். இந்திய விமானப்படையில் இவர் பணியில் சேரும்போது இவரது வயது 20. மேலும் தனது 30வது வயதில் இந்திய விமானப்படை வேலையை விட்டுவிட்டு, நாடகங்களில் நடிப்பதிலும், சினிமாவில் நடிக்க முயற்சி செய்வதிலும், கவனம் செலுத்தி வந்தார். 10 ஆண்டுகள் இவர் டெல்லியில் விமானப்படையில் பணியாற்றியபோது நாடக சாபாவில் பயிற்சியும் எடுத்து வந்துள்ளார்.

vijay delhi ganesh delhi ganesh death

விஜய்: டெல்லி கணேஷ் மறைந்ததை அடுத்து விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “ மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

vijay delhi ganesh delhi ganesh death

தமிழன்: நடிகர் விஜய் மற்றும் டெல்லி கணேஷ் தமிழன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யின் சீனியர் வக்கீலாக டெல்லி கணேஷ் நடித்திருப்பார். ஒரு காட்சியில் சிகரெட்டை நிறுத்து எனக் கூறும்போதும் விஜய் சிகரெட்டை நேராக டேபிளில் நிறுத்தி வைக்கும் காட்சியை இன்றைக்குப் பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு புகழ் பெற்ற நகைச்சுவைக் காட்சி அது எனலாம். இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைந்ததால், நடிகர் விஜய் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்: அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ”
என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X