Vijay's Official Net worth: விஜயின் அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு.. தகவல் வெளியானது!

சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து தற்போது, வேட்புமனுவின் விஜய் குறிப்பிட்டு இருக்கும் சொத்து மதிப்பின் விவரம் வெளியாகி உள்ளது.

பெரம்பூர் தொகுதியில் விஜய் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு, பிரச்சார வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அதைத்தொடர்ந்து கௌத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்து விட்டு, வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் திடீரென பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு, பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் புறப்பட்டு சென்றுவிட்டார். இதற்கு காரணம் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு இல்லாததால் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Viijay TVK Party Property

சொத்து மதிப்பு: இதையடுத்து தற்போது விஜயின் அசைவும் மற்றம் அசையா சொத்து குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அசையும் சொத்து 404 கோடி என்றும், சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.220 கோடி, பூர்வீகச் சொத்து மதிப்பு ₹21.83 கோடி. சுயமாக வாங்கிய அசையா சொத்து ₹92 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.734 கோடி ஆகும். இந்த வருமானம் திரைப்படங்கள், விளம்பர ஒப்பந்தங்கள், முதலீடுகள் மற்றும் பிற வருவாய் மூலங்களிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படுகிறது. சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் ஓவர் வங்கியில் ரூ.213 கோடி இருப்பு இருப்பதாக அந்த வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது.

110 சரவன் தங்க நகை: அதே போல, Maruti Swift கார் (TN 14 AK 6791) 2024ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ. 5,35,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், TVS XL Super (TN 14 AP 4284) 2025ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, அதன் மதிப்பு ரூ. 67,400 எனவும் மொத்தம் தனது பெயரில் 5 கார்கள் இருப்பதாக அந்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதே போல, தங்க நகை 110 சவரன் என்றும், ரூ.15 லட்சம் ரூபாய்க்கு வெள்ளி பொருட்கள் இருப்பதாகவும், கொடைக்கானலில் 2 எஸ்டேட், தி நகர், சோழிங்கநல்லூர் மற்றும் பாடியில் வணிக வளாகம் இருப்பதாகவும், விஜய்யின் பெயரில் கடன் ஏதும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X