கிழவிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. இது நாடா? இல்ல காடா? பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்!

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து களம் காணும் நிலையில், இன்று காலை பெரம்பூர் தொகுதியில் விஜய் தனதுவேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பிரச்சாரம் செய்த இவர் தீய சக்தி திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

விஜய் பிரச்சாரம்: தீய சக்தி திமுக ஆட்சியில் இந்த 5 ஆண்டில் போதை, ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அமைதிப்பூங்காவாக இருந்த இந்த தமிழ் நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது யார் என நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லை. தீய சக்தி திமுக தான் இதற்கு காரணம். இப்படி ஒன்றுக்குமே உதவாத ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டு விரைவில் விடை பெற போகும் ஸ்டாலின் சார் தான் காரணம். அரசாங்கம் என்று ஒன்று இருக்குதா இல்லையா? ஐந்து ஆண்டுகளாக போலீஸ் டிப்பார்ட்மெண்டை கையில் வைத்துக்கொண்டு, பாதுகாப்பைக்கூட கொடுக்க முடியவில்லை என்றால், எதற்கு இந்த ஆட்சி, இந்த அதிகாரம்.

Viijay TVK Party perambur

கொள்ளை அடிப்பது தான் முக்கியம்: தீயசக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? தீய சக்தி திமுக ஆட்சியில் நீங்கள் நிம்மதியாக இருந்தீர்களா? ஸ்டாலின் சார் அவர்களுக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள், பாதுகாப்புகள் பற்றி முக்கியம் இல்லை, இந்த 5 ஆண்டு ஆட்சியில் அவருக்கும், இந்த திமுக ஆட்சிக்கும் முக்கியம் என்ன தெரியுமா? குடும்பங்ததோடு சேர்ந்து கொள்ளை அடிப்பது தான் முக்கியம். டாஸ்மாக்கில் மட்டும் ஆயிரம் கோடி ஊழல் இது வெளியில் தெரிந்தது. இதுபோல தெரியாத பல விஷயம் இருக்கிறது.

காதில் விசில் அடிங்க: கொள்ளை அடித்த பணத்தை மக்களிடம் கொடுத்து எப்படியாவது ஜெயித்துவிடலாம் என கனவு கண்டு கொண்டு இருப்பார்கள். அப்படி அவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், வாங்கிக்கொண்டு அவர்களில் காதில் விசிலை ஊதி அனுப்புங்க. திமுக எப்படி ஸ்மார்ட்டா கொள்ளை அடித்தார்களோ அதே போல நாமும் ஸ்மார்ட்டா செயல்பட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து கௌத்தூர் தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்தார்.

More from Filmibeat

Read more about: tvk party விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X