விஜய் பிரச்சார வாகனத்தில் தாவி குதித்த சிறுவன்.. பதறிப்போன விஜய்.. பரபரப்பான புதுச்சேரி!

சென்னை: புதுச்சேரியில் ஏப்ரல் 9ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக நீலாங்கரை வீட்டில் இருந்து காலை 8.30 மணிக்கு காரில் புறப்பட்டார். புதுச்சேரியில் அவரை கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் பிரச்சார வாகனத்தை தொடர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் திடீரென சிறுவன் ஒருவர் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியிலும், 11 மணி முதல் 12 மணி வரை கடலூர் சாலை மால் அருகிலும், 12 மணி முதல் 1 மணி வரை தவளக்குப்பம் ஜங்ஷன் பகுதியிலும் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி அளித்துள்ளது.

TVK leader Vijay
Photo Credit:
லேசான தடியடி: விஜய் புதுச்சேரி வந்ததும் அங்கு இருந்த தொண்டர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மரக்கணத்தில் கூட்ட நெரிசல் அதிகமாகி சாலையில் வாகனம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், விஜய் வந்த காரில் சில இளைஞர்கள் தாவி குதித்தனர். அவர்களை அங்கிருந்த பவுன்சர்கள் பிடித்து இழுத்து தள்ளினர். அப்போது, ரசிகர்கள் களைந்து செல்லாமல், விஜய்யின் வாகனத்தை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்ததால், அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளின் சாவியை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, ரசிகர்கள் கட்டுக்குள் வராததால், அந்த பகுதியில் லேசான லேசான தடியடி நடித்தினர்.

தாவி குதித்த சிறுவன்: முதற்கட்டமாக விஜய் தட்டாஞ்சாவடியில் 12 வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இதையடுத்து, தவளக்குப்பம் பகுதிக்கு விஜய்யின் பிரச்சாரவாகனம் சென்று கொண்டு இருக்க, எங்கிருந்தோ வந்த ஒரு சிறுவன் திடீரென பிரச்சார வாகனத்தில் தாவி குதித்தார். இதனால், விஜய் சற்று பதறிப்போக, பின் பவுன்சர்கள் அந்த சிறுவனை வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டனர். திடீரென சிறுவன் செய்த இந்த செயலால் சற்று நேரம் பரபரப்பானது. புதுச்சேரியில் மூன்று பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இருப்பதால், போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும், 1500க்கும் மேற்பட்ட துணை ராணுவபடையினர் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X