பரபரக்கும் சட்டமன்ற தேர்தல்.. வாக்களித்த விஜய்.. அடுத்த நொடி செய்தது தான் சூப்பர்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகாலை 7 மணி முதல் விறுவிறுப்பாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் மக்கள் உற்சாகமாக வாக்களித்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குரிமையை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

'தமிழக வெற்றி கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, மாநிலம் முழுவதும் நேரடியாக பிரச்சாரம் செய்தார். குறிப்பாக இளைஞர்களின் ஆதரவை அதிகமாக பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

Vijay TVK leader Vote

விஜய் வாக்களித்தார்: இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அவர் வாக்களித்த அடுத்த நொடியே விரலில் வைக்கப்பட்ட மையை தனது ரசிகர்களுக்கு காட்டியதும், அங்கு இருந்த மக்கள் மத்தியில் உற்சாகத்தில் ஆழ்த்தியது. விஜய் இந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பது அனைவருக்கு தெரியும் என்பதால், அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவர் வருவதற்கு முன்பே அங்கு திரண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். மொத்தத்தில், நடிகர் விஜயின் வாக்குப்பதிவு நிகழ்வு அந்த பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், இளைஞர்களின் அரசியல் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

Read more about: vijay vote விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X