அடுத்த மாதம் விஜய்க்கு டபுள் டென்ஷனா? ஏப்ரல் 20 முதல் மே 4 வரை பரபரப்பு.. தாக்குபிடிப்பாரா?
சென்னை: ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். விஜய் காத்திருந்த காலம் தற்போது நெருங்கி விட்டது, அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 23ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி இருக்கும் நிலையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக அவ்வளவு தான் என்ற விமர்சனம் வந்த போதும், மீண்டும் களத்திற்கு வந்த விஜய், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருந்த நேரத்தில் தான், இணையமே பற்றி எரியும் வகையில் ஒரு செய்தி வெளியானது. அதாவது விஜயின் மனைவி சங்கீதா, பிப்ரவரி 27ந் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு இணையத்தில் கசிந்தது. அந்த மனுவில் சங்கீதா, என் கணவர் விஜய், நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அந்த நடிகையுடனான உறவை முறித்துக்கொள்ளும்படி சொல்லியும், அவர் முறித்துக்கொள்ளாததால் விவாகரத்து கேட்பதாக கோரி இருந்தார்.

விஜய், திரிஷா: இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நேரத்தில், விஜய், திரிஷா இருவரும் ஒரே காரில், ஒரே நிற உடையில் ஜோடியாக தயாரிப்பாளரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது. பல ஆண்டுகளாக இருவரும் நல்ல நண்பர்கள் என கூறப்பட்டாலும், இந்த நிகழ்வு மீண்டும் இவர்களின் நட்பை கேள்விக்குறியாக்கி சர்ச்சையானது.
விஜய்க்கு டென்ஷன்: இந்நிலையில், இன்று தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும், மே 4ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த செய்தி இணையத்தில் வெளியானதுமே தவெக தொண்டர்களும், விஜயின் ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு காரணம் என்னவென்றால், விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதாவது வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே இந்த வழக்கு நீதிமன்றத்தில் வர இருக்கிறது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் விஜய்க்கு டபுள் டென்ஷன் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
கோயின்சிடென்ஸ் : இதுமட்டுமில்லாமல் மே 4ந் தேதி அதாவது வாக்கு எண்ணிக்கை நாளில் இன்னொரு 'கோயின்சிடென்ஸ்' அதாவது, நடிகை திரிஷாவின் பிறந்த நாளாகும் ஏப்ரல் 20ந் தேதி விவாகரத்து வழக்கு விசாரணை, ஏப்ரல் 23ந் தேதி வாக்குப்பதிவு, மே 4 ந் தேதி தேர்தல் முடிவு மற்றும் திரிஷாவின் பிறந்த நாள் என அடுத்தடுத்த மாதத்தில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. இவை அனைத்தையும் விஜய் தாக்குபிடிப்பாரா என ரசிகர்கள் இப்போதே புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











