போதையில் இருந்து நம்மைக் காக்க அரசாங்கத்தைவிட நாம்தான் கவனமாக இருக்கனும் -மாணவர்கள் மத்தியில் விஜய்!

சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டே தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சட்டமன்றம் வாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ - மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் கல்வி ஊக்கத்தொகையும் கொடுத்தார். அப்போது அவர் பேசிய பேச்சு இணையத்தில் மட்டும் இல்லாமல் அரசியல் தளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டும் அதேபோல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றம் வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவிகளை நேரில் அழைத்து கல்வி ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்குகி வருகின்றார்.

சென்னை திருவான்மியூரில் முதற்கட்டமாக இன்று அதாவது ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அரியலூர், கோவை, தருமபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி திருப்பூர், விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய விழாவில் பங்கேற்கின்றனர். உதவித் தொகை வாங்க மேடைக்கு வரும் மாணவர்கள் பேனா, செல்போன், புத்தகம் ஆகியவை கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

TVK Vijay Speech Vijay

இந்நிலையில் மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதற்கு முன்னர் பேசிய நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய், மாணவர்கள் மத்தியில் பேசுகையில், மாணவர்களாகிய நீங்கள் எப்போதும் போதைப் பொருளுக்கு ’நோ’ சொல்ல வேண்டும் என பேசினார். போதைப்பொருட்களில் இருந்து அரசாங்கம் நம்மைக் காக்கவேண்டும் என்பதை விட நமது உடல் நலத்தின் மீது நாம்தான் அதிக அக்கறையுடன் செயல்படவேண்டும். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும். போதையினால் உங்களின் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் அதிகமாக இருப்பதைப்பார்க்கும்போது எனக்குமே அச்சமாகத்தான் இருக்கின்றது. ” Say No To Temporary Pluses, Say No To Drugs"என விஜய் இரண்டு முறை கூற மாணவர்கள் திரும்பச் சொன்னார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X