தவெக மேடையில் திடீரென தாலியை கழட்டிய பெண்.. கிறுகிறுத்து போன தொண்டர்கள்!
சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் மகளிர் பொதுக்கூட்டத்திற்குள் புகுந்த பெண் ஒருவர், திடீரென கழுத்தில் இருந்த தாலியை கழட்டி நீதி வேண்டும் என ஆவேசமாக கத்தினார். மேலும் எனக்கு பாதுகாப்பு இல்லை என, மைக்கில் அவர் பேசியதால், சிறிது நேரத்தில் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகம் வெற்றிக் கழகம் சார்பில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் மகளிர் பொதுக்கூட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூரில் நடைபெற்றது. இது சிறப்பு விருந்தினராக ராஜ்மோகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பு உரை ஆற்றினார். அவர் பேசிக்கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்து வந்த பெண் ஒருவர், ராஜ்மோகனிடம் இருந்து மைக்கை வாங்கி பேசினார்.

தாலியை கழட்டிய பெண்: அனைவருக்கும் வணக்கம், என் பெயர் ராஜேஸ்வரி, நான் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்கிறேன். அனைவரும் என்னை தாக்குகிறார்கள். இது குறித்து அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் யாரும் என் புகாரை எடுத்துக்கொள்வதில்லை. என்னுடைய பெற்றோர் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். எனக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை. நான் என் பெற்றோருடனோ, என் கணவருடனோ இருக்க மாட்டேன் என பேசிக்கொண்டே திடீரென கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அனைவரும் முன்பும் காட்டினார்.
கூட்டத்தில் சலசலப்பு: இதையடுத்து, போலீசார் மேடை ஏறி அந்த பெண்ணை சமாதானப்படுத்தினார். அப்போதும் சமாதானமாக அந்த பெண், நான் பைத்தியமா? கொரோனா காலத்தில் இரவு நேரத்தில் வேலை பார்த்து இருக்கிறேன் நான் பைத்தியமா? என கேட்டார். இதையடுத்து, பெண் போலீசார் மற்றும் பெண் பவுன்சர்கள் மேடைக்கு சென்று அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர். அங்கு வந்த அந்த பெண்ணின் உறவினர்கள், அந்த பெண்ணுக்கு சற்று மனநலம் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறி அங்கிருந்து அழைத்து சென்றார்கள். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தி இணையத்தில் டிரெண்டான நிலையில், ஏற்கனவே த.வெ.க பிரச்சரத்தில் பிரச்சனைக்கு பிரச்சனை நடந்து வருகிறது. இதில், இப்படி ஒரு பிரச்சனையா? என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











