இது தேர்தல் இல்லை.. விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் நடக்கும் போர்.. வேலூரை அதிரவிட்ட விஜய்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று வேலூரில் தவெக கூட்டத்தில் பேசிய விஜய், இது தேர்தல் இல்லை, விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர் என்றார்.
பலத்த கரதோஷத்திற்கு இடையே பேசத் தொடங்கிய விஜய், இந்த தேர்தலை தமிழகத்திற்கும் NDAவிற்கான தேர்தல் என சொல்கிறார்கள். இது என்ன லாஜிக் என்று எனக்கு புரியவில்லை. இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழக மக்கள் போல ஒரு தெளிவான மக்களை எங்கேயும் பார்க்கவே முடியாது. அப்படி இருக்கும் போது எதற்கு தேவையே இல்லாமல் பால் டப்பாவை உருட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.

விஜய் பேச்சு: உண்மையிலேயே இந்த தேர்தல் எதற்கான தேர்தல் என்று தெரியுமா? தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர், தமிழக மக்களுக்கும் லஞ்சத்திற்கும் நடக்கும் போர், தமிழக மக்களுக்கும் நிர்வாகத்தை சரியாக செய்யாத திமுக அரசுக்கும் நடக்கும் போர், அதாவது தமிழக மக்களுக்கும் உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர், தமிழக மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் NDA, டில்லி பற்றி ஏன் பேசுகிறார் என்கிற லாஜிக் எனக்கு புரியவில்லை.
உல்டா மாடல் ஆட்சி: தமிழ்நாடு தான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு. தூய சக்தி டி.வி.கேவிற்கும், தீய சக்தி திமுகவிற்கும் தான் இந்த போர். இப்படி உக்கிரமாக இருக்கும் இந்த போரில் ஒன்றுக்கும் உதவாத இந்த பால் டப்பாவை உருட்டிக்கொண்டு மற்றொரு நகைச்சுவையான விஷயத்தை சொல்கிறார். அது என்னவென்றால் இந்த ஆட்சியில் தான், தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருக்கிறதாம். தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் தான், காமராஜர் ஆட்சி செய்த போது, அண்ணா, எம்ஜிஆர் ஆட்சி செய்த காலத்தில். ஆனால், இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத உல்டா மாடல் ஆட்சியில், தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இல்லை, சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடியன் நடத்தும் மாநிலமாக மாறி இருக்கிறது.
அதிசய தேர்தல்: உங்களுக்காக நான் பலவிதமான தடைகள், சூழ்ச்சிகளைத் தாண்டி, 2026 தேர்தலில் டி.வி.கே தில்லாக நிற்கிறது. இதுவரைக்கும் நடந்த தேர்தல் வேறு, இப்போது நடக்க இருக்கும் தேர்தல் வேறு. ஒவ்வொரு ஐந்தாண்டு நடக்கும் தேர்தலை போல இந்த தேர்தலை நினைத்து விடாதீர்கள். 50 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் போல இந்த தேர்தல் ஒரு அதிசய தேர்தல் என்று விஜய் வேலூரில் அதிரடியாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தொண்டர்களுக்கு மேற்கூரை போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications