தவெக மதுரை மாநாடு.. தொண்டர்கள் செய்த அட்டகாசம்.. தொழிலாளி கதறல்.. விஜய் கொஞ்சம் கவனிக்க வேண்டும்
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாடில் சேதாரமும் நடந்திருக்கிறது. இந்நிலையில் அதனை கவனித்த ஒருதரப்பினர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேள்வியை முன்வைத்துவருகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் வைத்தார். அதனையடுத்து மும்முரமாக அரசியல் களத்தில் சுற்றி சுழன்றுவரும் அவர்; கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என பிரகடனப்படுத்தியிருக்கிறார். அதிலும் திமுகவை தான் ஏறும் மேடைகளில் எல்லாம் கடுமையாக விமர்சித்துவருகிறார். அதற்கு திமுகவினரும் தங்களால் முடிந்த பதிலடியை கொடுத்துதான் வருகிறார். ஆனாலும் திமுக மீதான விமர்சன போக்கு விஜய்யிடம் துளியும் குறையவில்லை.
இரண்டாவது மாநாடு: கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. முதல் மாநாட்டினை போலவே வெகு சிறப்பாக நடத்திட வேண்டுமென்பதில் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு மூச்சாக களத்தில் குதித்தார்கள். எங்கும் கட் அவுட், போஸ்டர்கள் என களைகட்டிய மாநாட்டு திடலில் கிட்டத்தட்ட பல லட்சம் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அனைவரது மத்தியிலுமே விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புதான் நிலவியது.

விஜய்யின் பேச்சு: விஜய்யும் அதற்கு தகுந்தபடிதான் பேசினார். வழக்கம்போல் திமுகவையும், பாஜகவையும் டார்கெட் செய்த அவர், முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என்று விளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கமல்ஹாசன், சீமான் ஆகியோரையும் மறைமுகமாக விமர்சித்து பேசினார். அதற்கு கமல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுவிட்டது. சீமான் இனி வரும் நாட்களில் தனது பதிலடியை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி அரசியல் களம் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நாற்காலிகள் தட்டுப்பாடு: இதற்கிடையே இரண்டு லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் கொண்டு வர ஐந்து ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களில் நான்கு ஒப்பந்ததாரர்கள் கடைசி நேரத்தில் சேர்களை தருவதற்கு மறுத்துவிட்டார்கள். இதனால் என்ன செய்வதென்று திகைத்த கட்சியினர்; உடனடியாக கேரளாவில் சில ஒப்பந்ததாரர்களிடம் பேசி சேர்களை வரவழைத்துவிட்டார்கள். இது ஒருபக்கம் இருக்க் நூறு அடி கொடி கம்பம் சாய்ந்து கார் சேதம், கூட்ட நெரிசலில் சிக்கி நீலகிரியை சேர்ந்த 18 வயது இளைஞர் உயிரிழப்பு என மாநாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நாற்காலிகள் சேதம்: இது ஒருபக்கம் இருக்க நேற்று போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் நாற்காலிகள் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்கிரவாண்டி மாநாட்டிலும் இதேபோல் நாற்காலிகள் சேதமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மாநாட்டுக்கு சேர்கள் சப்ளை செய்த கம்பெனி ஊழியர் ஒருவர், "50,000 சேர்களை நாங்கள் கொடுத்தோம். எத்தனை உடைந்திருக்கின்றன என்பது தெரியவில்லை. மாநாட்டுக்கு வந்து கொண்டாடிவிட்டு செல்வது வேறு; சேர்களை உடைத்துவிட்டு செல்வது வேறு. ஒரு சேரின் விலை 300 ரூபாய் இருக்கும். ஒவ்வொரு சேரையும் தேடி கண்டுபிடிக்க நாய் மாதிரி அலைய வேண்டும். ஹைவேஸ்வரைக்கும் சேரை கொண்டு சென்று உடைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











