திமுகவை வெளியேற்றுவோம்.. பெண்களுக்கு எப்போதும் துணை இருப்பேன்.. மகளிர் தின வாழ்த்து சொன்ன விஜய்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். கட்சி தொடங்கியதிலிருந்து தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்துவரும் அவர் நேற்று இஃப்தார் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதுதொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. சூழல் இப்படி இருக்க உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தவெக தலைவர் விஜய் பெண்களுக்கு தன்னுடைய மகளிர் தின வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்துவரும் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் நடித்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தத் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் ரசிகர்களை பெரிய அளவில் அந்தப் படம் திருப்திப்படுத்தவில்லை. பழைய திரைக்கதை, கதையிலும் பெரிய விஷயம் இல்லை என்று பலரும் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். விமர்சன ரீதியாக கோட் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக லாபம் கொடுத்துவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனமாக ஏஜிஎஸ் கூறியிருக்கிறது.

ஜன நாயகன்: அவர் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக தெரிகிறது. முக்கியமாக இந்தப் படம்தான் விஜய் நடிக்கும் கடைசி படம் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் முழுக்க கவனம் செலுத்தவருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சி தொடங்கி இரண்டாவது வருடம் ஆரம்பித்திருக்கிறது. ஜன நாயகன் ஷூட்டிங்கில் இருந்தாலும் அவர் அரசியல் மீட்டிங்கிலும் தவறாமல் கலந்துகொள்கிறார். முதலில் மாநாட்டில் பேசிய அவர் தமிழ்நாட்டினை ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதே போக்கைத்தான் அவரது அடுத்தடுத்த அரசியல் மேடைகளில் பின்பற்றினார். இதன் காரணமாக திமுகவினரும் விஜய்யை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

TVK President and Actor Vijay has wished Women s Day 2025

பாஜகவின் கைகூலி?: விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை காட்டமாக விமர்சிக்கும் அவர்கள்; தவெகவை பாஜகவின் கைகூலியாகவே பார்க்கிறார்கள். திமுகவை அழிப்பதற்காக பாஜகவினர் விஜய்யை களமிறக்கியிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். திமுகவின் இந்த விமர்சனத்துக்கு விஜய்யும் தகுந்த பதிலடியை கொடுத்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க நேற்று சென்னையில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்தும் விஜய்யை திமுகவினர் கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு தவெகவினரும் தங்களால் முடிந்தவரைக்கும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

விஜய்யின் வீடியோ: இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி வீடியோ வெளியிட்டிருக்கும் விஜய், "எல்லோருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெண்களுக்கு இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே. பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷமாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.


எப்போதும் துணை இருப்பேன்: நீங்கள், நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாற்றத்திற்குரியதுதானே. 2026ஆம் ஆண்டு நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதி ஏற்போம். ஒன்னு மட்டும் சொல்கிறேன் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக துணை நிற்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X