சங்கீதாவை வெறுப்பேத்த.. ஒரே கார்.. ஒரே நிற உடையில் ரிசப்ஷனுக்கு திரிஷாவுடன் ஜோடியாக வந்த விஜய்!

சென்னை: ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒரே காரில் ஒன்றாக பங்கேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், இந்த வீடியோ ,இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, பூவே உனக்காக படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை சந்தித்து வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து, 1998 ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. விஜய் கிறிஸ்துவராக இருந்தாலும் சங்கீதா இந்து என்பதால் இந்து முறைப்படியே திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Vijay Trisha sangeetha

விவாகரத்து மனு: தற்போது, விஜய்யின் மனைவி சங்கீதா 27 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவரது வாழ்வில் பூகம்பம் வெடித்துள்ளது. அவரது காதல் மனைவி சங்கீதா தற்போது விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் உறவில் இருக்கிறார். பல முறை அந்த நடிகையுடன் உறவை துண்டிக்க சொல்லியும் என் கணவர் அதை கைவிடவில்லை என்பதால், மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். இதனால், இந்த திருமண வாழ்க்கையை முறித்துவிடுமாறு சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு ஏப்ரல் 20ந் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த விவாகரத்து மனு சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய், திரிஷா: சங்கீதா அந்த விவாகரத்து மனுவில் திரிஷாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், சோஷியல் மீடியாவில் திரிஷாவின் பெயர் அடிப்பட்டு வரும் நிலையில், ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே காரில் ஒன்றாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, செல்லும் போது இருவரும் தனித்தனி காரில் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளாகி உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் ஏற்கனவே பிரச்சனை இருக்கும் இந்த நேரத்தில் தளபதி செய்தது சரியில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X