ஜன நாயகன் தான் கடைசி படம்.. தளபதி குட்டிக் கதையுடன் திட்டவட்டமாக மாநாட்டில் பேசிய விஜய்.. பக்கா மாஸ்!
சென்னை: திரைப்படங்களில் இனிமேல் விஜய்யின் பஞ்ச் வசனத்தையும் மாஸ் கரிஷ்மா ஆக்டிங்கையும் பார்க்க முடியாமல் என நினைத்த ரசிகர்களுக்கு அடிக்கடி மாநில மாநாடு வைத்தாலே பல படங்களுக்கும் ஆடியோ லாஞ்சுக்கும் இணையாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளார். மதுரையில் இன்று நடைபெற்று வரும் பிரம்மாண்டமான மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய விஜய் சிவகாசி சரவெடி போல வெடித்து பேசியது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளது.
ஆனால், அதே சமயம் சினிமா ரசிகர்களுக்கு மீண்டும் புரியும்படி தான் இதற்கு மேல் படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை திட்டவட்டமாக சொல்லியிருப்பது சற்றே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் துணை முதல்வராகவே மாறிய நிலையில், பவன் கல்யாண் படங்களில் நடித்து வருவதை போல விஜய்யும் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் அந்த ஆசையை குழி தோண்டி புதைத்து விட வேண்டியது தான்.
லியோ 2வெல்லாம் வராது: எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ஏற்கனவே கமிட்டான நிலையில், அந்த படத்தை நடித்துக் கொடுக்க சம்மதித்ததாக விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்ட போதே தெளிவுப்படுத்தியிருந்தார். ஆனால், விஜய் அடுத்த படத்துக்கு கதை கேட்டு விட்டார் என்றும் லியோ 2வில் நடிப்பார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வரும் நிலையில், இதற்கு மேல் தனக்கு எந்த வேலையும் இல்லை என்றும் மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் பணியாற்ற மட்டுமே போவதாக கூறியுள்ளார்.
தளபதி குட்டிக்கதை: ஆடியோ வெளியிட்டு விழாக்களில் விஜய் எப்போதுமே குட்டி ஸ்டோரி சொல்வது வழக்கம். இன்று நடைபெற்ற மதுரை மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் என கலாய்த்து பேசிய விஜய் குட்டிக் கதை ஒன்றையும் கூறி அரசியல்வாதி வேஷத்தில் பலர் திருடர்களாக உள்ளார்கள் என கடுமையாக பேசியிருந்தார். "மன்னர் ஒருவர் 10 வீரர்களை அழைத்து வந்து அடுத்த தளபதி உங்களில் ஒருவர் தான் என்று சொல்லி விட்டு அதற்கு நீங்கள் இந்த விதையை வளர்த்து எடுத்து வரவேண்டும் என்று அனுப்பி வைத்தார்.
9 திருட்டுப்பசங்க: போன 10 படை வீரர்களில் 9 பேர் அந்த விதையை ஆளுயரத்துக்கும் தோளுயரத்துக்கும் வளர்த்துக் கொண்டு வந்தனர். ஒரே ஒரு ஆள் மட்டும் தான் அரசே எவ்வளவோ முயற்சி செய்துவிட்டேன் இந்த விதை வளரவே இல்லை என்றான். உடனடியாக நீ தான் என்னோட அடுத்த தளபதி என அந்த நபரை அரசர் பதவிக் கொடுத்து அழகு பார்த்தார். நான் அனைவருக்கும் கொடுத்தது வெந்த விதை அது செடியாக மாற வாய்ப்பே இல்லை. மற்ற 9 திருடர்களும் ஏமாற்றி வேறு விதையை வளர்த்துக் கொண்டு வந்திருக்கின்றனர். நீ மட்டும் தான் உண்மையான தளபதி என்றார்" நீங்கள் தான் அரசர்கள் உங்களின் உண்மையான தளபதி யார் எனக் கேட்டு விஜய் மாநாட்டை அதிர வைத்தார்.


Click it and Unblock the Notifications











