விஜய் முதல்வராவதை தடுக்காதே? ஆளுநர் மாளிகை முன் சங்கு ஊதி போராடிய தவெக தொண்டர்!

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து தவெக தொண்டர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு சங்கு ஊதி போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில்108 இடங்களில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் தவெகவால் ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை நிலவியதால், திமுக கூட்டணிகள் இருந்த காங்கிரஸ். திமுக கூட்டணிகள் இருந்து விலகி தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தது.

பதவியேற்பில் சிக்கல்: இதனால், தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்த்தது. இதைத்தொடர்ந்து விஜய் தமிழக ஆளுநரை இரண்டு முறை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையை கூறினார். மேலும், பதவி ஏற்புக்கு பின் சட்டம் மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறினார். ஆனால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இதுவரையில் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மேலும், திமுகவும், அதிமுகவும் கூட்டணி வைக்க இருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதுமட்டுமில்லாமல், 118 எம்.எல்.ஏக்களுடன் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

Vijay TVK Leader

சங்கு ஊதி போராட்டம்: இந்நிலையில், விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை கண்டித்து தவெக தொண்டர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டார். விஜய் முதல்வராவதை தடுக்காதே, மறுக்காதே மறுக்காதே மக்கள் தீர்ப்பை மறுக்காதே, தடுக்காதே தடுக்காதே விஜய் முதல்வராவதை தடுக்கதே என சங்கு ஊதி ஆக்ரோஷமாக முழக்கமிட்டார். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்தனர். ஆனால், அப்போதும் தவெக தொண்டர் தொடர்ந்து முழக்கமிட்டதால், அவரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், ஆளுநர் மாளிகை முன்பு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X