Vijay Fans: திருமாவளவன் முதலமைச்சரா நடிச்சிருக்காரா?.. திடீர்னு விஜய் ரசிகர்கள் லிஸ்ட் போடுவது ஏன்?

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததும் வைத்தார், விஜய் ரசிகர்கள் வழக்கத்தை விட இணையத்திலும் சமூக வலைதளத்திலும் படு ஆக்டிவாக இருக்கின்றார்கள். முன்பெல்லாம் விஜய் ரசிகர்கள் அவரின் படங்களை உலக அளவில் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால் இப்போது விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளை அன்றைய தினத்தின் டாக் ஆஃப் த டே-வாக மாற்றிவிடுகின்றார்கள். இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் தற்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நடித்த படங்களை பட்டியலிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் அரசியல் வருவதற்கு முன்னர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். மேலும் அந்த உதவித் தொகை வழங்கும் விழாவில் காமராசர், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரையும் படிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இப்படியான இவரது நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டி வரவேற்றார்.

vijay thirumavalavan vijay fans

மேலும் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியபோதும் அனைத்து கட்சியினரும் விஜய்க்கு வாழ்த்து கூறினார்கள். அப்போது திருமாவளவனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வந்தபோது, விஜய் திருமாவளவனைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தது. விஜய் கடந்த மாதம் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அதில் விஜய்யின் பேச்சு, பல முற்போக்கு அரசியல் சக்திகளுக்கு விஜய்யின் பேச்சில் சில பகுதிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் விஜய் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்கப்போகின்றார் என்ற மனநிலையில் பேசிகொண்டு உள்ளார் எனவும் விமர்சிக்கப்பட்டது.

vijay thirumavalavan vijay fans

விசிக - தவெக: இன்றைக்கு ஆட்சியில் உள்ள திமுகவை விஜய் நேரடியாகவே விமர்சித்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். விசிகவினரும் விஜய்யின் பேச்சுக்கு அரசியல் ரீதியாக பதிலடி கொடுத்து வந்தாலும் நேரடியாக இவர்கள் இருவருக்கு இடையில் இதுவரை மோதலோ இணக்கமோ ஏற்படவில்லை. அண்மையில் வெளியான தகவலில் விசிக தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட, அதனை தவெக தலைவர் விஜய் பெற்றுக்கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை விசிக தலைவர் திருமாவளவன் உறுதி செய்தார்.

vijay thirumavalavan vijay fans

நடிகரின் கட்சி: விஜய் கட்சியின் மாநாடு நடைபெற்றபோது, ஊடகங்கள் அவற்றை மைய்யப்படுத்தி பல செய்திகளை வெளியிட்டன. பல ஊடகங்கள் லைவ் டெலிகாஸ்ட் செய்தனர். இதனை விசிக தலைவர் திருமாவளவன் ஒரு நடிகர் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகூட ஆகவில்லை. அவரது கட்சி மாநாட்டினை லைவ் டெலிகாஸ்ட் செய்கின்றார்கள், அது தொடர்பாக விவாதங்கள் நடத்துகின்றார்கள். ஆனால் தமிழ்நாடு அரசியலின் திசைவழிப்போக்கினை தீர்மானிக்கும் சக்தி படைத்தை விசிகவின் மது ஒழிப்பு மாநாடு குறித்து ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை" எனக் குற்றம்சாட்டினார்.

படங்கள்: இந்நிலையில் விஜய் ரசிகர்கள் திருமாவளவன் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களையும் அதில் வரும் காட்சிகளையும் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். திருமாவளவன் கடந்த 2007ஆம் ஆண்டு அன்புத்தோழி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின்னர் 2011ஆம் ஆண்டு வெளியான மின்சாரம் திரைப்படத்தில் முதலமைச்சராக நடித்துள்ளார். இந்தப் படத்தின் காட்சிகளை விஜய் ரசிகர்கள் பகிர, இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியில் திருமாவளவன் நடித்துள்ளாரா எனக் கேட்டுவருகின்றனர். மேலும் திருமாவளவனும் நடிகர்தான் எனவும் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X