GOAT: அவமானப்படுத்தப்படும் விஜய்? அரசியலுக்கு வரும்போது இப்படியா? ஏ.ஜி.எஸ் மீது ரசிகர்கள் கோபம்!

சென்னை: தளபதி விஜய், சினிமாவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி முழுக்க முழுக்க அரசியலில் பயணிக்கவுள்ளார். இதனால் இவரது கடைசி இரண்டாவது படமாக கோட் படம் அமைந்தது. இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்தது. வெங்கட் பிரபு இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தமிழ் நாட்டில் மட்டும் 1100 ஸ்கீன்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இது இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் ஆனது. அதேபோல் படம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் முழுவதுமாக முடிந்து விட்டது. மூன்றாவது வாரமாக படம் ஓடிக்கொண்டு உள்ளது.

கோட் படத்தின் பட்ஜெட் ரூபாய் 386 கோடிகள் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே கூறியிருந்தார். இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் ரூபாய் 200 கோடி. படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தது மட்டும் இல்லாமல், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மஒக் மோகன், ஜெய்ராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் மட்டும் இல்லாமல், விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி உருவாக்கப்படது.

goat vijay goat box office collection

படம் முதல் நாளில் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்தது என படக்குழுவே தெரிவித்தது. அதன் பின்னர் முதல் நான்கு நாட்களில் படத்தின் வசூல் ரூபாய் 288 கோடிகள் என தெரிவித்தது. அதேபோல் 13 நாட்களில் படம் ரூபாய் 413 கோடிகளை வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் படம் இரண்டு வாரங்களைக் கடந்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. இதனை இப்பட்டிச் சொல்வதை விடவும் மூன்றாவது வாரத்தில் படத்தை ஓட்டிக் கொண்டு உள்ளார்கள் என்றுதான் கூறவேண்டும்.

goat vijay goat box office collection

குறைந்த காட்சிகள்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், தமிழ் நாடு முழுவதும் படம் மொத்தம் 1100 திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில், பல தியேட்டர்கள் சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள், பல மல்டி ஸ்க்ரீன் தியேட்டர்கள். இதில் மல்டி ஸ்க்ரீன் தியேட்டர்களில் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுவிட்டது. மேலும் சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் படத்தினை, வேறு வழியில்லாமல் காட்சிகளை ஒதுக்கி வருகின்றனர். இப்படியான நிலையில், பல தியேட்டர்களில் படம் பார்க்க குறைந்த பட்சமாக தேவையான ரசிகர்கள் இல்லாமல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றது என்ற தகவல்கள் சினிமா வட்டாரத்தில் உலா வருகின்றன.

goat vijay goat box office collection

பொது மக்கள்: போதிய ரசிகர்கள் இல்லாததால் கோட் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றது என்பது விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் சில ரசிகர்களுக்கு மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, படத்தினை இரண்டாவது வாரத்தில் இருந்து பொதுமக்கள்தான் பார்க்க வருவார்கள். இப்படியான நிலையில், படம் பார்க்க வரும் பொதுமக்கள், விஜய் படத்தை பார்க்க போதிய ஆட்கள் இல்லாததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது எனத் தெரிந்தால் அவர்கள் மனதில், விஜய் குறித்தும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் என்ன மாதிரியான எண்ணத்தை உண்டாக்கும் என நினைத்து வருத்தப்படுகின்றார்கள். விஜய் படத்தைப் பார்க்கவே ஆட்கள் இல்லை கட்சியில் ஆட்கள் இருக்கவா போகின்றார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடாதா என தவெக பொறுப்பாளர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபடுவதாக கூறப்படுகின்றது.

goat vijay goat box office collection

ஏ.ஜி.எஸ்: அதேபோல் படத்தினை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் இவையெல்லாம் தெரிந்தும் ஏன் அமைதியாகவே இருக்கின்றார்கள். வார இறுதி நாட்களில் வரும் சுமாரான வசூலுக்காக விஜய்யின் அரசியல் எதிர்காலத்தை பலிகிடாவா மாற்றுகின்றார்கள் என ரசிகர்களுக்கு இடையில் பேச்சு அடிபடுகின்றது. பெருநகரங்களில் கோட் படத்தினைப் பார்க்க இன்னமும் ரசிகர்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். வார இறுதி நாட்களில் பல தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே உள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

goat vijay goat box office collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X