ஜனநாயகனிலும் அவரை விடாத விஜய்.. கேமியோவாக களமிறங்கும் பான் இந்தியா ஸ்டார்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். படத்தை கே.வி. என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் விஜய்யின் 69வது படம் இந்த படத்துடன் விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறார் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் அடுத்த ஆண்டு தை பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் விஜய்யின் தலையீடு காரணமாக சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி விட்டார். அடுத்த ஆண்டு ஜனவரி முதலே அவருக்கு நிக்க நேரமில்லை எனக் கூறும் அளவுக்கு தேர்தல் வேலைகள் அமையவுள்ளது. தான் கட்சி ஆரம்பித்து எதிர் கொள்ளும் முதல் தேர்தல் என்பதால், அவர் என்ன மாதிரியான தேர்தல் யுக்தியை கையாளப் போகிறார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

ஜனவரியில் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால், அது தேர்தலில் எதிரொலிக்கும் என விஜய் நம்பிக் கொண்டு உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது மட்டும் இல்லாமல் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு, பிரியாமணி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். படத்தில் விஜய்யின் தலையீடு காரணமாக எம்.ஜி.ஆர் புகைப்படம் படத்தில் இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

TVK Thalapathy Vijay Jana Nayagan Movie Has MGR Scene Anirudh PlayS Dance Cameo
Photo Credit:

எம்.ஜி.ஆர்: இந்த தகவலைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் பலரும், விஜய் ஏன் இப்படி நடிகரும் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆரை விடமாட்டேன் என்கிறார். அவரது கட்சி சார்பில் சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிலும் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பயன்படுத்தியது தொடங்கி, மேடையிலேயே அவரது புகழ் பாடினார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியலில் காலடி எடுத்து வைத்த போதும் கூட, அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று தொண்டர்களும் ரசிகர்களும் அழைத்தார்கள்.

சினிமா - அரசியல்: அப்படி இருக்கும்போது விஜய்யும் எம்.ஜி.ஆர் புகைப்படத்துடன் அவரும் இருக்கும் காட்சி, ஜனநாயகன் படத்தில் இடம் பெற்றுள்ளதால், திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் எம்.ஜி.ஆரை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் அவர்கள்தான் அடுத்த எம்.ஜி.ஆர் என்று அழைத்துக் கொள்வது, வாடிக்கையாகி விட்டது என்று கூறுகிறார்கள். அதேபோல் அதிமுகவில் இருக்கும் அதிருப்தி வாக்குகளை கவர, விஜய் இது போல முயற்சிகளை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

TVK Thalapathy Vijay Jana Nayagan Movie Has MGR Scene Anirudh PlayS Dance Cameo
Photo Credit:

அனிருத் கேமியோ: இது மட்டும் இல்லாமல் ஏற்கனவே படத்தில் இயக்குநர்கள் அட்லீ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் என மூவரும் நடிக்கிறார்களாம். இவர்கள் மூவரும் பத்திரிகையாளர்களாக படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாகவே அனிருத் தான் இசையமைக்கும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் லிரிக் வீடியோவுக்கு நடனம் ஆடுவார். சில படங்களில் படத்திலேயே நடனம் ஆடியுள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்தும், பீஸ்ட் படத்தில் விஜய் உடன் இணைந்தும் நடனம் ஆடியுள்ளார். இப்படி இருக்கும்போது, ஜனநாயகன் படத்திலும் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X