Sachein Booking: கில்லியை ஓரம் கட்ட பிளான்.. தளபதி விஜய் டூ தவெக விஜய்.. ரீ ரிலீஸ் புக்கிங் தெறிக்குதே

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இந்த படத்தை எழுதி இயக்கினார். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரீ ரிலீஸ் செய்கிறார். நாளை அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி இந்த படம் ரி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் புக்கிங் எப்படி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

TVK Thalapathy Vijay Sachein Movie Re Release Ticket Booking Goes Well in All Over Tamilnadu

கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான படம் சச்சின். முழுக்க முழுக்க ஃபீல் குட் படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் கூட, விளம்பரங்களுக்கு மத்தியிலும் படத்தை முழுவதுமாக பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். படத்தில் பாடல்கள் தொடங்கி, ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்டதால் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் விஜய் ரசிகராக இல்லாதவர்களுக்கும் இந்த படம் மிகவும் பிடித்த படம் எனக் கூறலாம்.

TVK Thalapathy Vijay Sachein Movie Re Release Ticket Booking Goes Well in All Over Tamilnadu

சச்சின்: விஜய் சினிமாவில் இருந்து முழுவதும் விலகி, அரசியலில் களமிறங்கி விட்டார். இவரது நடிப்பில் உருவாகி வரும் கடைசி படமான ஜனநாயகன் படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் விஜய்க்கு பிரியா விடை கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டுதான் இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்வதாக, தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே தெரிவித்திருந்தார். படம் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது என்றாலும், இன்று அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் பிரீமியர் ஷோ திரையிடப்படவுள்ளது.

TVK Thalapathy Vijay Sachein Movie Re Release Ticket Booking Goes Well in All Over Tamilnadu

ரீ ரிலீஸ்: படம் நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் படத்திற்கான புக்கிங் என்பது சென்னை மட்டும் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. சென்னை ரோகிணி திரையரங்கில் நாளை முதல் மூன்று காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. தளபதி விஜய் படம் என்பதை விட தவெக தலைவர் விஜய் படம் என்பதால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தொண்டர்கள், ரீ ரிலீஸை கொண்டாடி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

TVK Thalapathy Vijay Sachein Movie Re Release Ticket Booking Goes Well in All Over Tamilnadu

கில்லி: இது மட்டும் இல்லாமல், ஏற்கனவே இந்திய அளவில் ரீ ரிலீஸ் செய்து அதிக வசூலை ஈட்டிய படமாக விஜய்யின் கில்லி படம் உள்ளது. தமிழ் சினிமா அளவில், கில்லி முதல் இடத்தில் உள்ளது. சச்சின் படத்தின் மூலம் கில்லி படத்தின் சாதனை முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புக் மை ஷோவில் கிட்டத்தட்ட அடுத்த மூன்று நாட்களுக்கான பெரும்பான்மையான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டது. இதனால் தயாரிப்பாளர் தாணு மட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள், தவெகவினர் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X