Sachein Rerelease: தளபதி விஜய் ஜெனிலியாவ கட்டிப் பிடிச்சதும்! அதிரும் தியேட்டர்.. வீடியோ இருக்கு பாஸ்
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். ஜான் மகேந்திரன் இயக்கி, கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படம், ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தியேட்டர்களுக்கு மேல் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகிறார்கள்.
படங்களை ரீ ரிலீஸ் செய்யும் போக்கு தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை ரீ ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள். இதுவரை தமிழ் சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த படத்தை ரீ ரிலீஸ் செய்து அவரது ரசிகர்களை தயாரிப்பாளர்கள் உற்சாகபடுத்தி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் தளபதி விஜய்யின் சச்சின் படம் இன்று அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் படத்தை தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார்கள். படத்தின் பிரீமியர் ஷோ நேற்று அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்பட்டது.

சச்சின் ரீ ரிலீஸ்: தளபதி விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர், ரீ ரிலீஸ் செய்யப்படும் படம் சச்சின் என்பதால் இந்த படத்தின் ரீ ரிலீஸ் மீது திரைத்துறையில் கவனம் இருந்தது. ஏற்கனவே இவரது போக்கிரி, கில்லி போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகியிருந்தாலும் சச்சின் படத்தின் மீது தனி கவனம் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த படம் அதிரடி சண்டைக் காட்சிகள், மாஸான டயலாக்குகள் நிறைந்த படங்கள் இல்லை. ஆனால் இந்த படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த ஃபீல் குட் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

வரவேற்பு: படம் இன்று வெளியான நிலையில் படத்தைப் பார்க்க ஏற்கனவே ரசிகர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் புக் செய்தனர். படத்தை காலை 9 மணிக்கு பார்க்க திரையரங்கில் ரசிகர்கள் கூடினார்கள். மேலும் படத்தின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் ரசிகர்கள் தியேட்டர் அதிரும் அளவுக்கு அலப்பறை செய்தார்கள். தியேட்டருக்குள் செல்வதற்கு முன்னர் ரசிகர்கள் புது படம் ரிலீஸ் ஆகும்போது எப்படி வரவேற்பார்களோ அதேபோல், இந்த படத்தையும் வரவேற்றார்கள்.

ரியாக்ஷன்: படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய், நடிகை ஜெனிலியாவை கட்டிப் பிடிப்பார். அந்த காட்சியை தனது மொபைலில் பதிவு செய்த ரசிகர் ஒருவர் அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.விஜய்யும் ஜெனிலியாவும் கட்டிப் பிடித்துக் கொள்ளும் போது, தியேட்டரில் இருந்த ரசிகர்கள் 'தலைவா மறுபடியும் நடி தலைவா' என்று கத்துகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை இயக்கிய இயக்குநர் ஜான் மகேந்திரன், தயாரிப்பாளர் தாணு, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் உள்ளிட்ட பலரை வாழ்த்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











