அலறவிட்ட தளபதி விஜய் காளை.. அதிர்ந்த வாடிவாசல்.. நின்று விளையாடி மிரட்டல்.. தொட அஞ்சிய வீரர்கள்..!
மதுரை: தமிழ்நாடு மட்டும் இல்லை, உலகம் முழுவதும் எங்கு ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும், அது மதுரை மண்ணில் நடைபெறுவதைப்போல் இருக்கவே இருக்காது. அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிட்டு போட்டிகள்தான், பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், ஆயிரக் கணக்கான காளைகளும் கலந்து கொள்வார்கள். நாள் முழுவதும் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு விடுவார்கள். இப்படியான நிலையில் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் நடிகர் விஜய் காளை களமிறக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் திருவிழாதான். அதிலும் குறிப்பாக பொங்கல் விடுமுறையைக் குறிவைத்து தமிழ் சினிமாவில் இருந்து பல படங்கள் ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்றுதான். இந்த ஆண்டு விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் எனக் கூறப்பட்டதால், பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. ஆனால், விடாமுயற்சி படம் ரிலீஸ் இல்லை எனக் கூறிய பின்னர், பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்று வருகின்றது. இதில் மூன்றாவது நாளான இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த, ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆயிரத்திற்கும் அதிகமான காளைகளும் ஆயிரத்திற்கும் அதிகாமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சூரி: போட்டியைக் காண, அமைச்சரும் துணை முதலமைச்சருமான உதயநிதியின் மகன் இன்பநிதியும் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் செய்திகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரியின் காளையான, ராஜாக்கூர் கருப்பன் என பெயர் வைக்கப்பட்ட காளை கலந்து கொண்டது. அந்தக் காளையை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவரது காளை வாடி வாசல் வழியாக வெளியே வந்தபோது, துணை முதலமைச்சர் உதயநிதி சூரி வரவில்லையா என அமைச்சர் மூர்த்தியிடம் கேட்டார்.

விஜய்: நடிகர் சூரியின் காளையை இன்றைக்கு எப்படி யாராலும் தொட முடியவில்லையோ, அதேபோல் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பெயரில் ஒரு காளை அவிழ்த்து விடப்பட்டது. வாடி வாசலில் இருந்து மாடு பிடி வீரர்களை நோக்கி, சீறிப்பாய்ந்தது. காளை வந்த வேகத்தைப் பார்த்த மாடு பிடி வீரர்கள் தெறித்து ஓடினார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.




Click it and Unblock the Notifications











